காதலியை திருமணம் செய்ய வீட்டை உடைத்து திருடிய இளைஞர்கள் கைது!

news18
Updated: June 26, 2019, 10:40 PM IST
காதலியை திருமணம் செய்ய வீட்டை உடைத்து திருடிய இளைஞர்கள் கைது!
மாதிரிப் படம்
news18
Updated: June 26, 2019, 10:40 PM IST
சென்னை தாம்பரத்தில் காதலித்த பெண்ணைத் திருமணம் செய்வதற்காக நண்பர்களுடன் சேர்ந்து வீட்டை உடைத்து கொள்ளையடித்தவர் இளைஞர்கள் மூன்று பேர் கைது செய்யப்பட்டு சிறையிலடைக்கப்பட்டுள்ளனர். 

சென்னை மேற்கு தாம்பரம், ஸ்ரீராம் நகரைச் சேர்ந்தவர் சவுந்தர பாண்டியன். இவர் கடந்த 23-ம் தேதி குடும்பத்துடன் பெங்களூருக்கு சென்று பின்னர் 24-ம் தேதி மாலை வீட்டிற்கு திரும்பிவந்து பார்த்தபோது வீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டிருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார்.

பின்னர் வீட்டின் உள்ளே சென்று பார்த்தபோது வீட்டில் இருந்த விலை உயர்ந்த LED டிவி மற்றும் வீட்டு உபயோக பொருட்கள் கொள்ளையடிக்கப்பட்டு இருந்தது. இதனையடுத்து சம்பவம் குறித்து சவுந்தர பாண்டியன் தாம்பரம் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார்.

புகாரின் பேரில் தாம்பரம் உதவி ஆணையர் அசோகன் தலைமையில் போலீசார் சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளைக் கொண்டு விசாரணை நடத்தியபோது அப்பகுதியில் ஒரு கார் நீண்டநேரமாக நின்று
கொண்டிருந்ததால் சந்தேகமடைந்த போலீசார் அந்த காரை குறித்து விசாரித்தபோது, அந்த காரை குரோம்பேட்டையைச் சேர்ந்த மூன்று பேர் வாடகைக்கு எடுத்துச் சென்றது தெரியவந்தது.

இதனையடுத்து காரை வாடகைக்கு எடுத்துச் சென்ற குரோம்பேட்டையைச் சேர்ந்த செல்லத்துரை (ஏ) அந்தோணி ஜோசப், விக்னேஷ், மேரி மைக்கேல் ஆண்டனி ஆகிய மூன்று பேரை பிடித்து காவல் நிலையம் அழைத்து வந்து விசாரித்தனர்.

விசாரணையில் செல்லத்துரை அந்தோணி ஜோசப் ஒரு பெண்ணை காதலித்து வந்ததாகவும், அவரை திருமணம் செய்ய திட்டமிட்டபோது அதற்கு 10 லட்சம் ரூபாய் தேவைப்படும் என்பதால் கொள்ளையடித்து அதன் மூலம் விரும் பணத்தை வைத்து திருமணம் செய்ய திட்டமிட்டு அவரது நண்பர்களான விக்னேஷ் மற்றும் மேரி மைக்கேல் அன்டனியுடன் சேர்ந்து முதலில் மேற்கு தாம்பரம், பழைய ஸ்டேட் பேங்க் காலனி பகுதியில் ஒரு இருசக்கர வாகனத்தை திருடி உள்ளனர்.
Loading...
பின்னர், ஒரு காரை வாடகைக்கு எடுத்து இரவு நேரத்தில் சென்று நோட்டமிட்டு அங்கு பூட்டிக்கிடந்த வீட்டின் கதவை கடப்பாரையால் உடைத்து பின்னர் வீட்டின் உள்ளே சென்று அங்குள்ள பீரோவை கடப்பாரையால் உடைத்து பார்த்தபோது அதில் பணம் எதுவும் இல்லாததால் வெறுப்பான அவர்கள் வீட்டில் இருந்த டிவி மற்றும் வீட்டு உபயோக பொருட்களைக் கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது. இதனையடுத்து அவர்கள் மூன்று பேரையும் கைது செய்த போலீசார் அவர்களை தாம்பரம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி நீதிமன்ற உத்தரவின்படி சிறையில் அடைத்தனர்.

Also see:

First published: June 26, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...