சென்னை அடுத்த மணலி அறிஞர் அண்ணா முதல் தெருவை சேர்ந்தவர் நாகராஜ் (வயது 37). இவர் பெயிண்டிங் காண்ட்ராக்ட் வேலை செய்து வந்துள்ளார். இவருக்கு திருமணமாகி வரலட்சுமி என்ற மனைவியும், இரண்டு ஆண் குழந்தைகள் உள்ளனர். பெருமாள் ஆன்லைனில் ரம்மி விளையாடி வந்துள்ளார். கடந்த ஆறு மாதம் காலமாக ரம்மி விளையாடி, அதில் அதிக பணத்தை இழந்து கடன் சுமையால் மன உளைச்சலில் இருந்து வந்துள்ளார். இதன்காரணமாக நாகராஜ் மற்றும் அவரது மனைவி வரலட்சுமிக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாக தெரிகிறது.
இந்நிலையில், நாகராஜ் தான் பயன்படுதி வந்த செல்போனை அடகுவைத்து வைத்துள்ளார். இதனால் கோபமடைந்த மனைவி அவரிடம் சண்டையிட்டுள்ளார். அதன்பின் இரவு தூங்க சென்றுவிட்டனர். இன்று அதிகாலை எழுந்து பார்த்த போது நாகராஜ் அவரது அறையில் நைலான் கயிற்றால் தூக்கில் தொங்கிய படி சடலமாக கிடந்துள்ளார்.
Follow @ Google News:கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
இதனைக்கண்டு அதிர்ச்சியடைந்த வரலட்சுமியின் அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் அங்கு வந்தனர். இதுகுறித்து தகவல் அறித்த நாகராஜ் அண்ணன் பாலமுருகன் கயிற்றை அறுத்து நாகராஜ் சடலத்தை கீழே இறக்கியுள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக மணலி காவல்நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
இதனையடுத்து சம்பவ இடத்துக்கு விரைந்த போலீஸார் நாகராஜ் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த தற்கொலை தொடர்பாக மணலி காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து இறந்த நபரின் மனைவியிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதேபோன்று கடந்த 6ஆம் தேதி மணலி புது நகரை சேர்ந்த பவானி என்ற பெண் ஆன்லைன் ரம்மி விளையாடி அதில் 20 சவரன் நகைகள் மற்றும் 3 லட்சம் பணத்தை இழந்து தற்கொலை செய்து கொண்டது குறிப்பிடத்தக்கது.
செய்தியாளர்: அசோக் குமார்( சென்னை)
Published by:Ramprasath H
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.