திருட்டு நடைபெற்ற 12 மணி நேரத்தில் குற்றவாளியை கைது செய்த போலீசார்... சென்னை போலீஸ் அதிரடி

குற்றச் சம்பவம் நடைபெற்ற அடுத்த 12 மணி நேரத்திற்குள் குற்றவாளியை கைது செய்து, போலீசாரை அடையார் துணை ஆணையர் பகலவன் உள்ளிட்ட காவல்துறை உயர் அதிகாரிகள் பாராட்டுக்களை தெரிவித்தனர்.

திருட்டு நடைபெற்ற 12 மணி நேரத்தில் குற்றவாளியை கைது செய்த போலீசார்... சென்னை போலீஸ் அதிரடி
சிசிடிவி காட்சி
  • Share this:
குற்றச் சம்பவம் நடைபெற்ற அடுத்த 12 மணி நேரத்தில் குற்றவாளியை கைது செய்து, கொள்ளை போன பணத்தையும் பறிமுதல் செய்த தரமணி குற்றப்பிரிவு போலீசாருக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகின்றன. 

சென்னை தரமணி சிஎஸ்ஆர் சாலை வி.வி. கோயில் தெருவில் சாதுல் இஸ்லாம் என்பவர் கடந்த 3 ஆண்டுகளாக டீக்கடை வைத்து வருகிறார்.

மேற்கு வங்களத்தை சேர்ந்த இவர் திரிபூரா மாநிலத்தை சேர்ந்த லோகேஷ் என்பவரை பணிக்கு அமர்த்தி உள்ளார்.
கடந்த 11-ம் தேதி இரவு வழக்கம்போல் கடையை பூட்டி சென்ற சாதுல்இஸ்லாம் மறுநாள் காலை கடையை திறக்க வந்தபோது கடையின் பூட்டு உடைக்கப்பட்டிருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார்.

பின்னர் உள்ளே சென்று பார்த்தபோது கல்லாப்பெட்டியில் இருந்த ரூ.50,000 ரொக்கப் பணமும் காணாமல் போனதால் அருகில் உள்ள தரமணி காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.புகாரைப் பெற்ற குற்றப்பிரிவு ஆய்வாளர் புஷ்பராஜ் உதவியாளர் ஜோதி பிரகாஷ் தலைமையிலான தனிப்படை போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று அங்கு பாதுகாப்பிற்க்காக பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமராவை ஆய்வு செய்தனர்.

சிசிடிவி காட்சி


கடையில் பணிபுரிந்த லோகேஷ் மற்றும் அவருடைய நண்பர் இருவர் கடைக்குள் புகுந்து முகத்தில் துணி கட்டியவாறு லாக்கரில் வைத்திருந்த பணத்தையும், செல்போனையும் திருடி சென்றது உறுதியானது.

சிசிடிவி காட்சிகளை கைப்பற்றிய தரமணி குற்றப்பிரிவு போலீசார் லோகேஷ் செல்போன் டவரை வைத்து தரமணி ரயில் நிலையத்தில் பதுங்கியிருந்த அவரை, சம்பவம் நடந்த அடுத்த 12 மணி நேரத்திற்குள் கையும் களவுமாக பிடித்து கைது செய்துள்ளனர்.

குற்றவாளி லோகேஷ்


அவரிடமிருந்து ரூ.17,000 ரொக்கமும், ஒரு செல்போனையும் போலீசார் பறிமுதல் செய்துள்ளனர், மேலும் மீதமுள்ள பணத்தை அவருடைய நண்பர் ஷெராஜ் இஸ்லாம் என்பவர்க்கு பங்கு பிரித்துக் கொடுத்து விட்டதால் தலைமறைவாக உள்ள ஷெராஜ் இஸ்லாமை போலீசார் தேடி வருகின்றனர்.

குற்றச் சம்பவம் நடைபெற்ற அடுத்த 12 மணி நேரத்திற்குள் குற்றவாளியை கைது செய்து, கொள்ளை போன பணத்தையும் கைப்பற்றிய தரமணி குற்றப்பிரிவு ஆய்வாளர் புஷ்பராஜ், உதவி ஆய்வாளர் ஜோதி பிரகாஷ், சட்டம் ஒழுங்கு உதவி ஆய்வாளர் இளம்வழுதி, காவலர் ராஜசேகர் ஆகியோரை அடையார் துணை ஆணையர் பகலவன் உள்ளிட்ட காவல்துறை உயர் அதிகாரிகள் பாராட்டுக்களை தெரிவித்தனர்.

Also watch: சர்வாதிகாரமா...? ராஜ தந்திரமா...? காஷ்மீர் விவகாரத்தில் ரஜினி, கமல் கருத்து!

First published: August 15, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்