Home /News /tamil-nadu /

சென்னை நகைப்பட்டறையில் 118 சவரன் நகை திருடிய ஊழியர் பெங்களூர் விமான நிலையத்தில் கைது

சென்னை நகைப்பட்டறையில் 118 சவரன் நகை திருடிய ஊழியர் பெங்களூர் விமான நிலையத்தில் கைது

கோப்புப்படம்

கோப்புப்படம்

சென்னை நகைப் பட்டறையிலிருந்து 118 சவரன் நகை திருடிய பட்டறை ஊழியர் பெங்களூர் விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்,

சென்னை வடபழனி கங்கை அம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் சுலா தேஷ் குமார் மாஜ்ஹி. மேற்கு வங்க மாநிலத்தைப் பூர்வீகமாகக் கொண்ட இவர் வடபழனியில் தனது வீட்டிலேயே நகைப்பட்டறை வைத்து நகை செய்யும் தொழில் செய்து வருகிறார்.

கடந்த 6 மாதங்களாக அவரின் சொந்த ஊரைச் சேர்ந்த அஜீசுர் ரஹ்மான் என்பவர் வீட்டில் மொட்டை மாடியில் தங்கியிருந்து, நகைப் பட்டறையில் வேலை செய்து வந்துள்ளார். கடந்த மாதம் 31ம் தேதியன்று அஜீசுர் ரஹ்மான் 945 கிராம் எடையுள்ள 39 நகைகளை (118 சவரன்) திருடிச் சென்றதாகக் கூறப்படுகிறது.

Also read: மும்மொழித்திட்டத்தை எதிர்த்துள்ள முதல்வருக்கு நன்றி - மு.க ஸ்டாலின்

அதிர்ச்சியடைந்த சுலா தேஷ் குமார் மாஜ்ஹி சொந்த ஊரில் உள்ள அஜீசுர் ரஹ்மானின் உறவினர்களுக்குத் தகவல் கூறினார். அவர்கள் மேற்கண்ட பொருட்களை மீட்டுத் தருவதாக உறுதி அளித்ததால், சுலா தேஷ் குமார் மாஜ்ஹி புகார் ஏதும் கொடுக்கவில்லை.

இந்நிலையில், பெங்களூர் விமான நிலையம் சென்று விமானம் மூலம் மேற்குவங்க மாநிலம் செல்ல முயற்சித்த போது, சுங்க இலாகா அதிகாரிகள் மூலம் அஜீசுர் ரஹ்மான் பிடிக்கப்பட்டுள்ளார். இது தொடர்பான தகவல் சுலா தேஷ் குமார் மாஜ்ஹிக்கு தெரிய வந்த உடனே அவர் வடபழனி காவல் நிலையத்தில் புகார் தெரிவித்தார். வழக்குப் பதிவு செய்த போலீசார் பெங்களூரில் வைக்கப்பட்டுள்ள அஜீசுர் ரஹ்மானை சென்னைக்கு அழைத்து வர தனிப்படை போலீசார் பெங்களூர் விரைந்துள்ளனர்.



நாடு முழுவதும் ஊரடங்கு அமலில் உள்ள இந்த நேரத்தில் சென்னையிலிருந்து பெங்களூர் செல்வதற்கு எப்படி அவர் ஈ-பாஸ் தயார் செய்தார், விமானத்தில் பயணம் செய்வதற்கான ஆவணங்களை எவ்வாறு தயார் செய்தார் என்பன குறித்து பெங்களூர் சுங்க இலாகா துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Published by:Rizwan
First published:

Tags: Crime | குற்றச் செய்திகள்

அடுத்த செய்தி