சென்னையில் பிரண்ட்ஸ் ஆஃப் போலீஸ் அமைப்புக்கு தடை இல்லை: சென்னை காவல் ஆணையர்

சென்னையில் பிரண்ட்ஸ் ஆஃப் போலீஸ் அமைப்புக்குத் தடை இல்லை என்று சென்னை காவல் ஆணையர் மகேஷ்குமார் அகர்வால் தெரிவித்துள்ளார்.

சென்னையில் பிரண்ட்ஸ் ஆஃப் போலீஸ் அமைப்புக்கு தடை இல்லை: சென்னை காவல் ஆணையர்
சென்னையில் பிரண்ட்ஸ் ஆஃப் போலீஸ் அமைப்புக்குத் தடை இல்லை என்று சென்னை காவல் ஆணையர் மகேஷ்குமார் அகர்வால் தெரிவித்துள்ளார்.
  • Share this:
சென்னை அண்ணா ஆர்ச் பகுதியில் வாகன தணிக்கை ஆய்வு செய்த பின் செய்தியாளர்களை சந்தித்த சென்னை காவல் ஆணையர் மகேஷ்குமார் அகர்வால், வணிகர்கள் மற்றும் மக்கள் இடையே இணைந்து காவலர்களுக்கு உதவியாக தான் பிரண்ட்ஸ் ஆப் போலீஸ் அமைப்பு பயன்படுத்தப்பட்டு வருகிறது.

காவலர்களின் பணிகளான கண்காணிப்பு பணி மற்றும் ரோந்து பணிகளில் அவர்களை ஈடுபடுத்தவில்லை என அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் சட்டத்தை மீறி பிரண்ட்ஸ் ஆப் போலீஸ் காவலர்கள் செயல்பட்டால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார். ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமைகளிலும் தளர்வு இல்லா முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுவதால் பயன் ஏற்பட்டுள்ளதாக சென்னை காவல் ஆணையர் தெரிவித்துள்ளார்.


சர்வதேச அளவில் ஞாயிற்றுக்கிழமைகளில் தளர்வில் இல்லா முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது, கொரானாவைக் கட்டுப்படுத்த உதவியாக இருப்பதாக குறிப்பிட்டுள்ளார்.

தமிழகம் முழுவதும் பிரண்ட்ஸ் ஆஃப் போலீஸ்க்கு இடைக்கால தடை விதிக்கப்பட்டுள்ளது என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

 

மேலும் படிக்க... 


மேலும் நாளை முதல் முழு ஊரடங்கு தளர்த்தப்பட இருப்பதால், சென்னையில் மக்கள் அதிகமாக கூடும் பகுதிகளில் உள்ள, சம்மபந்தப்பட்ட துணை ஆணையர்களை ஆய்வு நடத்தி கொரோனா வராமல் இருக்க நடவடிக்கை எடுக்க உத்தரவு பிறப்பித்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
First published: July 5, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading