Home /News /tamil-nadu /

திருடிய நகைகளை விற்று கள்ளக்காதலிக்கு ஜிமிக்கி கம்மல் வாங்கி கொடுத்த திருடன் - சிக்கிய சிசிடிவி காட்சிகள்

திருடிய நகைகளை விற்று கள்ளக்காதலிக்கு ஜிமிக்கி கம்மல் வாங்கி கொடுத்த திருடன் - சிக்கிய சிசிடிவி காட்சிகள்

சிசிடிவி காட்சிகள்

சிசிடிவி காட்சிகள்

திருடிய நகைகளை விற்று கள்ளக் காதலிக்கு ஜிமிக்கி கம்மல் வாங்கி கொடுத்த திருடன் சிக்கிய சிசிடிவி காட்சிகள் மூலம் போலீசிடம் சிக்கியுள்ளார்.

சென்னை அண்ணா சாலையையொட்டி, பீட்டர்ஸ் சாலை பகுதியில் உள்ள குடியிருப்புகளில் அடிக்கடி வீட்டில் உள்ள தங்க நகை உள்ளிட்ட பொருட்கள், வெளியில் நிறுத்தி வைத்திருந்த இரு சக்கர வாகனங்கள் திருடு போவதாக தொடர்ந்து அண்ணா சாலை காவல்நிலைய போலீசாருக்கு புகார் வந்தது.

கடந்த மாதம் 26-ம் தேதி அதே பகுதியில் உள்ள ஒரு வீட்டில் 5 சவரன் நகைகள் திருடு போய்விட்டதாக போலீசாருக்கு புகார் வந்தது.
நகை பணம் தொடர்ச்சியாக திருடு போவதை கண்டு குற்றவாளியை பிடிக்க காவல் ஆய்வாளர் சந்திரமோகன் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது.

திருட்டு நடந்த இடங்களில் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்த போலீசார் சந்தேகப்படும்படியான ஒரு நபரை பின்தொடர்ந்த போது அவர் திருவல்லிக்கேணி, மாட்டாங்குப்பத்தை சேர்ந்த மேகநாதன் (32) என்பது தெரியவந்தது. இதனையடுத்து அவரை காவல் நிலையம் அழைத்து வந்து போலீஸார் விசாரணை செய்தனர். முதலில் குற்றத்தை ஒப்புக்கொள்ள மறுத்த மேகநாதன் பின்னர் தான் வழக்கமாக திருடுவதை ஒப்புக் கொண்டுள்ளார்.

ALSO READ :  திருவள்ளூர் அருகே கொரோனா உறுதி செய்யப்பட்ட 16 பேர் ஆம்புலன்ஸில் இருந்து தப்பி ஓட்டம்

மேலும் கொரோனா ஊரடங்கின் காரணமாக மனைவி மற்றும் குழந்தைகளை சொந்த ஊருக்கு அனுப்பிவிட்டு திருடிய நகைகளை எல்லாம் தி.நகரில் உள்ள ஒரு சிறிய நகைக்கடையில் விற்பதும் தெரியவந்தது. திருடிய நகைகளை விற்ற பணத்தில் பிரபல நகை கடையில் புதிதாக ஜிமிக்கி, கம்மல் ஆகியவை வாங்கி தனது கள்ளக் காதலிக்கு கொடுத்ததும் விசாரணையில் தெரியவந்தது.

இதனையடுத்து திருட்டு நகைகளை விற்ற கடைக்குச் சென்று போலீசார் விசாரணை செய்தபோது நகைக்கடைக்காரர்கள் 18 கிராம் நகை மட்டுமே தாங்கள் வாங்கியதாக கூறியுள்ளனர். பின்னர் அவர்களிடம் நடத்திய கிடுக்குப்பிடி விசாரணையில் 5 சவரன் நகையை திருடனிடமிருந்து வாங்கியதாக ஒப்புக்கொண்டனர். இதனையடுத்து கடைக்காரரிடம் இருந்து 5 சவரன் நகையை போலீசார் மீட்டனர்.





மேலும் விசாரணையில் கைது செய்யப்பட்டிருக்கும் மேகநாதன் மீது தண்டையார்பேட்டை மற்றும் அண்ணா சதுக்கம் ஆகிய காவல் நிலையங்களில் நகை, லேப்டாப், இருசக்கர வாகன திருட்டு வழக்குகள் நிலுவையில் இருப்பதும் தெரியவந்தது.  வழக்கு பதிவு செய்த அண்ணாசாலை போலீசார் ரங்கநாதனை சிறையில் அடைத்தனர்.
Published by:Sankaravadivoo G
First published:

Tags: CCTV, CCTV Footage, Crime | குற்றச் செய்திகள்

அடுத்த செய்தி