சென்னையில் தொழிலதிபரின் அலுவலகம் உடைக்கப்பட்டு கார், பணம் திருட்டு - போலீசார் விசாரணை

சென்னை சாலிகிராமத்தில் தொழிலதிபரின் அலுவலகம் உடைக்கப்பட்டு கார், பணம் திருடப்பட்ட சம்பவம் நடந்துள்ளது

சென்னையில் தொழிலதிபரின் அலுவலகம் உடைக்கப்பட்டு கார், பணம் திருட்டு - போலீசார் விசாரணை
உடைக்கப்பட்ட கதவு
  • News18
  • Last Updated: May 29, 2020, 11:24 AM IST
  • Share this:
சென்னை சாலிகிராமம் பகுதியில் உள்ள லோகய்யா காலனியைச் சேர்ந்தவர் கோபி கிருஷ்ணன். கட்டடம் கட்டும் அலுவலகம் ஒன்றை கடந்த 7 ஆண்டுகளாக நடத்தி வருகிறார்.

கொரோனா ஊரடங்குக்கு முன்னதாக ₹ 13.5 லட்சம் மதிப்புள்ள புதிய டொயோட்டா காரை வாங்கியுள்ளார். வீடும் அலுவலகமும் அருகருகே என்பதால் காரை அலுவலகத்தில் நிறுத்தி வைத்துவிட்டு இவர் வீட்டுக்கு நடந்து சென்று வருவதை வாடிக்கையாக வைத்திருந்துள்ளார்.

இந்த நிலையில் நேற்று அலுவலக பணிகளை முடித்து விட்டு காரை அலுவலகத்திலேயே விட்டு, எப்போதும் போல நடந்து வீட்டிற்கு சென்றுள்ளார். மீண்டும் இன்று காலை அவர் அலுவலகம் வந்த பொழுது மெயின் கேட் உடைக்கப்பட்டு கார் திருடு போயிருப்பது கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார்.


மேலும் அலுவலக கதவுகளும் உடைக்கப்பட்டு ரூபாய் 20 ஆயிரம் பணம் மற்றும் ஒரு லட்சம் மதிப்புள்ள இரண்டு கேமரா ஆகியவையும் திருடு போனதை அறிந்த அவர் விருகம்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர் சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் விசாரணையை மேற்கொண்டனர்.

மூன்று நபர்கள் இந்த திருட்டு வேலையில் ஈடுபட்டிருப்பது போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
மேலும் தடயவியல் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து கைரேகை பதிவுகளை சேகரித்து கொண்டனர். வழக்கு பதிவு செய்த போலீசார் கார், பணம் மற்றும் கேமராக்களை திருடிய திருடர்களை தீவிரமாக தேடி வருகின்றனர்.
First published: May 29, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்
corona virus btn
corona virus btn
Loading