சென்னையில் எத்தனை பேருக்கு கொரோனா பாதிப்பு? ஆய்வு கூறும் தகவல்..

முன்னதாக ஜுலையில் நடத்திய ஆய்வில், 12,405 ரத்த மாதிரிகளை ஆய்வு செய்ததில் 2,673 பேருக்கு கொரோனாவுக்கான ஆண்டிபாடிகள் உருவாகி இருப்பது தெரியவந்தது.

சென்னையில் எத்தனை பேருக்கு கொரோனா பாதிப்பு? ஆய்வு கூறும் தகவல்..
கோப்புப் படம்
  • News18
  • Last Updated: October 22, 2020, 2:27 PM IST
  • Share this:
சென்னையில் மூன்றில் ஒரு பகுதியினருக்கு கொரோனாவுக்கான ஆண்டிபாடிகள் உருவாகி இருப்பது ஆய்வில் தெரியவந்துள்ளது.

சென்னையில் எத்தனை சதவிகித மக்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு குணமடைந்துள்ளனர், எத்தனை பேருக்கு கொரோனாவை எதிர்கொள்வதற்கான ஆன்டிபாடிகள் உடலில் உருவாகி உள்ளன என்பதை கண்டறிய சொரோ பிரிவேலென்ஸ் ஸ்டெடி (seroprevalence study) மேற்கொள்ளப்பட்டது.

Also read... Gold Rate | தொடர்ந்து உயரும் தங்கம் விலை.. இன்றைய நிலவரம் என்ன?


முன்னதாக ஜுலையில் நடத்திய ஆய்வில், 12,405 ரத்த மாதிரிகளை ஆய்வு செய்ததில் 2,673 பேருக்கு கொரோனாவுக்கான ஆண்டிபாடிகள் உருவாகி இருப்பது தெரியவந்தது. இது  21.5 சதவிகிதமாகும்.

தற்போது இரண்டாம் கட்ட ஆய்வுகளுக்கான முடிவுகளை சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ளது. இதில், 6,389 பேரின் ரத்த மாதிரிகள் சோதனை செய்ததில் 2,062 பேருக்கு கொரோனா வந்து குணமடைந்து ஆண்டிபாடிகள் உருவாகி உள்ளது தெரியவந்துள்ளது. இது 32.3 சதவிகிதமாகும். அதாவது சென்னையில் மூன்றில் ஒரு பகுதியினருக்கு எதிர்ப்பு ஆற்றல் உருவாகி உள்ளதாக ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.
First published: October 22, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading