சென்னை மக்களே உஷார்.. மீண்டும் வேகமாக அதிகரிக்கிறது கொரோனா தொற்று..

கோப்புப் படம்

முகக்கவகம் அணிவது மட்டுமே கொரோனாவுக்கு மருந்து. அடுத்து வரும் மூன்று மாதம் காலமாவது சென்னையில் மக்கள் கட்டாயம் வீட்டில் இருந்து வெளியே வந்தால் மாஸ்க் அணிய வேண்டும்" என்றார் பிரகாஷ்.

  • News18
  • Last Updated :
  • Share this:
சென்னையில் கொரோனா தொற்றால் பாதித்து சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. சென்னையில் கடந்த சில மாதங்களாக குறைந்து வந்த கொரோனா தொற்று எண்ணிக்கை தற்போது மீண்டும் அதிகரிக்க தொடங்கி உள்ளது. கடந்த வாரம் வரை 10,000 கீழ் சென்னையில் சிகிச்சையில் இருப்போரின் எண்ணிக்கை தற்போது 13,280-ஆக அதிகரித்துள்ளது.

அதிகபட்சமாக அண்ணா நகர், தேனாம்பேட்டை, கோடம்பாக்கம் மண்டலங்களில் 1300-க்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெற்று மேற்பட்டோர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதற்கு அடுத்தபடியாக, திருவிக நகர், அடையாறு மண்டலங்களில் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் சிகிச்சையில் உள்ளனர்.

சென்னையில் நாளொன்றுக்கு சராசரியாக 14,000 கொரோனா பரிசோதனை செய்யப்படுகிறது. சென்னையில் தொற்று உறுதி செய்வோரின் சதவிகிதம் 7 ஆக குறைந்த நிலையில், தற்போது மீண்டும் 10 ஆக அதிகரித்துள்ளது.

இதுகுறித்து சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் கூறுகையில், ”சென்னையில் இதுவரை 16 லட்சம் நபர்களுக்கு பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இது சென்னை மாநகராட்சி மக்கள் தொகையில் 20 சதவீதமாகும்.Also read... தமிழகத்தில் 10 ஆயிரத்தை தாண்டியது கொரோனா உயிரிழப்புகள்

அதாவது மாநகராட்சியில் ஐந்தில் ஒரு நபருக்கு பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. தற்போது கொரோனா உறுதி செய்யப்படும் சாதவிகிதம் 10 ஆக உள்ளது. இதை ஐந்து சதவீதத்திற்கு கீழ் கொண்டு வர வேண்டும். இம்மாத இறுதியில் 7 சதவீதமாக கொண்டு வருவதே இலக்கு.

மீண்டும் தொற்று பரவல் அதிகரிக்க மக்கள் முகக்கவசம் அணியாததும் முக்கிய காரணம். முகக்கவகம் அணிவது மட்டுமே கொரோனாவுக்கு மருந்து. அடுத்து வரும் மூன்று மாதம் காலமாவது சென்னையில் மக்கள் கட்டாயம் வீட்டில் இருந்து வெளியே வந்தால் மாஸ்க் அணிய வேண்டும்" என்றார்.
Published by:Vinothini Aandisamy
First published: