கொரோனா அறிகுறி உள்ளதா என சென்னையில் வீடு, வீடாக கணக்கெடுக்கும் பணி தொடக்கம்...!

வீட்டிற்கே வந்து சோதனைகள் மேற்கொள்வது, கொரோனாவை கட்டுப்படுத்துவதில் முக்கிய பங்கு வகிக்கும் என்கின்றனர் சமூக ஆர்வலர்கள்.

கொரோனா அறிகுறி உள்ளதா என சென்னையில் வீடு, வீடாக கணக்கெடுக்கும் பணி தொடக்கம்...!
கோப்பு படம்
  • Share this:
சென்னை மாநகரம் முழுவதும் உள்ள அனைத்து வீடுகளுக்கும் சென்று, பொதுமக்களுக்கு கொரோனா உள்ளதா என்ற சோதனைப் பணிகளை சென்னை மாநகராட்சி தொடங்கியுள்ளது.

தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் சூழலில், சென்னையில் அதிகபட்சமாக 95 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில் சென்னை மாநகராட்சி சார்பில் வீடு வீடாகச் சென்று, கொரோனா தடுப்பு சோதனைகள் மேற்கொள்ளும் பணி ஞாயிறு முதல் தொடங்கியுள்ளது.

இதனால் அடுத்த 90 நாட்களுக்கு, 16 ஆயிரம் பணியாளர்கள், சென்னையில் அனைத்து வீடுகளுக்கும் சென்று, மக்களுக்கு கொரோனா பாதிப்பு உள்ளதா என்று ஆய்வு செய்யவுள்ளனர்.


கொரோனா அறிகுறிகளான காய்ச்சல், சளி, வறட்டு இருமல், மூச்சுத்திணறல் உள்ளதா என ஒவ்வொருவரிடம் தனித் தனியாக கேட்டு அறிகின்றனர்.

இவ்வாறு சேகரிக்கப்படும் ஆய்வு மாதிரிகளில் சிலருக்கு தீவிர அறிகுறிகள் தென்பட்டால், அவர்கள் அடுத்தக்கட்ட பரிசோதனைக்கு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்படுவர்.

வீட்டிற்கே வந்து சோதனைகள் மேற்கொள்வது, கொரோனாவை கட்டுப்படுத்துவதில் முக்கிய பங்கு வகிக்கும் என்கின்றனர் சமூக ஆர்வலர்கள்.Also see...
First published: April 6, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்
corona virus btn
corona virus btn
Loading