வீட்டை விட்டு வெளியே சென்ற 40 பேர் மீது வழக்கு - சென்னை மாநகராட்சி அதிரடி!

சென்னையில் கொரோனா தொற்று பாதிக்கப்பட்டு வீடுகளில் தனிமைப் படுத்தப்பட்டு இருந்த நபர்களில் வெளியே சென்ற 40 பேர் மீது வழக்கு பதிவு செய்துள்ளது சென்னை மாநகராட்சி.

வீட்டை விட்டு வெளியே சென்ற 40 பேர் மீது வழக்கு - சென்னை மாநகராட்சி அதிரடி!
சென்னை மாநகராட்சி அலுவலகம். (கோப்புப்படம்)
  • Share this:
சென்னையில் நாளுக்கு நாள் உச்சத்தை தொட்டு வரும் கொரோனா பரவலை தடுக்கும் நடவடிக்கைகள் மிகத் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

குறிப்பாக, கொரோனா பரிசோதனை செய்த நபர்கள் அனைவரும் பரிசோதனை செய்த உடனேயே தங்களை 14 நாட்கள் தனிமைப் படுத்திக் கொள்ள வேண்டும் என்று சென்னை மாநகராட்சி நேற்று அறிவுறுத்தி இருந்தது.

அறிகுறிகள் இல்லாமல் தொற்று பாதிப்பு உறுதி செய்யப்படும் நபர்கள் அவர்களின் வீடுகளிலேயே தனிமைப் படுத்தப் பட்டு தொடர் கண்காணிப்பில் இருந்து வருகின்றனர்.


அப்படி தனிமைப் படுத்தப்பட்டு இருக்கும் நபர்கள் வீடுகளை விட்டு வெளியே சென்று வருவதாக புகார்கள் எழுந்தன. இதன் மூலம் மேலும் பலருக்கும் தொற்று பரவி, தொற்று எண்ணிக்கை அதிகரித்து வருவதாக சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.

 இந்நிலையில், வீடுகளை விட்டு வெளியே சென்ற 40 நபர்களின் மீது காவல் துறையில் புகார் அளிக்கப்பட்டு முதல் தகவல் அறிக்கை (எப்.ஐ.ஆர்.) பெறப்பட்டு உள்ளது.

அதிகபட்சமாக ராயபுரம், தண்டையார்பேட்டை மண்டலங்களில் தலா 7 பேர் மீதும், திருவொற்றியூரில் 4 பேர் மீதும், அண்ணாநகர், தேனாம்பேட்டை, கோடம்பாக்கம், வளசரவாக்கம் மண்டலங்களில் தலா 3 நபர் மீதும், அடையாறு, பெருங்குடி, சோழிங்கநல்லூர் மண்டலங்களில் தலா 2 நபர் மீதும், மணலி, மாதவரம், திருவிக நகர், அம்பத்தூர் மண்டலங்களில் தலா 1 நபர் என மொத்தம் 40 நபர்களின் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது.

வீடுகளில் தனிமைப்படுத்த பட்டு உள்ள நபர்கள் வீடுகளில் விட்டு வெளியே வந்தால் அவர்கள் மீது காவல் துறையில் புகார் அளிக்கப்பட்டு கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் எனவும்,அவர்களுடன் தொடர்பில் இருந்த நபர்கள் அனைவரும் அரசு மையங்களில் தங்க வைக்கப்படுவர் என்றும் சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் எச்சரித்து உள்ளார்.

Also read... திருவாரூரில் ஒரே நாளில் 14 பேருக்கு கொரோனா - 10 மாத குழந்தைக்கும் தொற்று

First published: June 12, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading