கொரோனாவோடு சேர்ந்து சென்னையை வாட்ட தொடங்கியது தண்ணீர் பற்றாக்குறை

கொரோனா பாதிப்பில் சிக்கிக் கொண்டிருக்கும் சென்னையில், தற்போது நிலத்தடி நீர் மட்டம் கணிசமாக குறைந்து வருவது மெட்ரோ குடிநீர் வாரியம் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.

கொரோனாவோடு சேர்ந்து சென்னையை வாட்ட தொடங்கியது தண்ணீர் பற்றாக்குறை
கோப்புப் படம்
  • Share this:
சென்னையில் கடந்த ஆண்டு ஏற்பட்ட தண்ணீர் பஞ்சம் அவ்வளவு எளிதில் மறக்க முடியாதது. அந்த தண்ணீர் பஞ்சத்திற்க்கு முந்தைய ஆண்டுகளில் போதிய பருவமழை பொழிவு இல்லாதது ஒரு காரணம் என்றால், நிலத்தடி நீர் வறண்டது மற்றொரு காரணம்.

எனவே, சென்னையில் நிலத்தடி நீராதாரத்தை உயர்த்த அனைத்து கட்டிடங்களிலும் மழைநீர் சேகரிப்பு கட்டமைப்பை வலுப்படுத்த அரசு தீவிர முயற்சிகள் மேற்கொண்டது. கடந்த ஆண்டு நவம்பர், டிசம்பர் மாதங்களில் கிடைத்த வடகிழக்கு பருவமழையின் மூலம் சென்னை ஓரளவு ஆறுதல் அடைந்தது. சென்னை முழுவதும் பரவலாக நிலத்தடி நீர் மட்டம் கணிசமாக உயர்ந்தது.

இந்நிலையில், கொரோனா பாதிப்பில் சிக்கி தவித்து வரும் சென்னையில் இந்தாண்டும் தண்ணீர் பற்றாக்குறை வந்துவிடக் கூடாது என்று நினைத்துக் கொண்டிருந்த வேளையில், வடசென்னை பகுதிகளில் ஓரிரு இடங்களில் தண்ணீர் பற்றாக்குறை காரணமாக மக்கள் குடங்களுடன் அலைந்து வருகின்றனர்.


இது ஒரு புறமிருக்க மெட்ரோ குடிநீர் வாரியம் நடத்திய ஆய்வில் சென்னையில் நிலத்தடி நீர் மட்டம் கணிசமாக குறைந்து வருவது கவலையை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த டிசம்பர், பிப்ரவரி மாதங்களுடன் ஒப்பிடுகையில் மே மாத நிலவரப்படி, திருவொற்றியூர், மணலி, மாதவரம், திரு.வி.க நகர், அம்பத்தூர், அண்ணாநகர், ஆலந்தூர், அடையாறு, பெருங்குடி உள்ளிட்ட மண்டலங்களில் 1 மீட்டர் முதல் 2 மீட்டர் வரை நிலத்தடி நீர் மட்டம் குறைந்துள்ளது.

சென்னையில் நிலத்தடி நீர் மட்டம் நிலத்தில் இருந்து... (மீட்டரில்)இடம் - (2019) டிசம்பர் - (2020) பிப்ரவரி - மே

திருவெற்றியூர் - 3.90 - 4.70 - 5.18

மணலி - 3.45 - 4.23 - 5.26

மாதவரம் - 4.60 - 5.56 - 6.52

தண்டையார்பேட்டை - 5.48 - 6.11 - 6.26

ராயபுரம் - 6.27 - 6.70 - 7.07

திருவிக நகர் - 4.60 - 5.41 - 7.52

அம்பத்தூர் - 4.54 - 5.98 - 7.72

அண்ணாநகர் - 3.71 - 4.79 - 5.81

தேனாம்பேட்டை - 4.66 - 5.43 - 5.63

கோடம்பாக்கம் - 5.66 - 6.42 - 7.07

வளசரவாக்கம் - 5.00 - 6.72 - 6.74

ஆலந்தூர் - 4.05 - 4.98 - 6.17

அடையாறு - 3.98 - 4.88 - 5.48

பெருங்குடி - 3.15 - 4.10 - 5.44

சோழிங்கநல்லூர் - 2.68 - 3.27 - 4

சென்னையின் நீராதாரமாக விளங்கும் ஏரிகளின் நீர் மட்டமும் மொத்த கொள்ளளவில் பாதிக்கும் குறைவாக உள்ளது.

ஜூன் 6 ஆம் தேதியின் படி ஏரிகள் நிலவரம் (மில்லியன் கன அடியில்)

ஏரி - மொத்த கொள்ளளவு - தற்போதைய அளவு - கடந்த ஆண்டு இருப்பு:

பூண்டி - 3231 - 380 - 40

சோழவரம் - 1081 - 72 - 1

புழல் - 3300 - 2694 - 2

செம்பரம்பாக்கம் - 3645 - 2111 - 1

மொத்தம் - 11,257 - 5,257 - 44

ஆந்திராவின் கிருஷ்ணா நதி நீர் கைகொடுத்ததால் ஏரிகளின் நீர் இருப்பு உள்ள நிலையில், கடந்த மூன்று மாதமாக அமல்படுத்தப்பட்டு இருந்த ஊரடங்கு காரணமாக தொழிற்சாலைகள், அலுவலகங்கள் இயங்காததாலும் தண்ணீர் தேவை குறைந்து இருந்தது.

தற்போது மீண்டும் அவை இயங்க துவங்கியுள்ளதால் தண்ணீரின் தேவை அதிகரிக்கும்.

இந்தாண்டு வடகிழக்கு பருவமழை துவங்க  இன்னும் நான்கு மாதங்கள் உள்ள நிலையில், தற்போதுள்ள நீர் இருப்பை வைத்து சென்னையின் நீர் தேவையை பற்றாக்குறை ஏற்படாமல் தடுக்க முடியும் என்று மெட்ரோ குடிநீர் வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Also read... இந்திய வானிலை ஆய்வு மையத்தை பாராட்டிய உலக வானிலை ஆய்வு மையம்... எதற்கு தெரியுமா?











Also see...
First published: June 8, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading