ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

அம்மாவுக்கு கடிதம் எழுதிவைத்து சட்டக்கல்லூரி மாணவன் தற்கொலை - தரமணியில் நிகழ்ந்த சோகம்

அம்மாவுக்கு கடிதம் எழுதிவைத்து சட்டக்கல்லூரி மாணவன் தற்கொலை - தரமணியில் நிகழ்ந்த சோகம்

சட்டக்கல்லூரி மாணவன் தற்கொலை

சட்டக்கல்லூரி மாணவன் தற்கொலை

Chennai : தான் சேமித்து வைத்திருந்த ரூபாய் 5000 அம்மாவிற்கு என கடிதம் எழுதிவைத்திருந்தது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

 • News18 Tamil
 • 2 minute read
 • Last Updated :

  சட்டகல்லூரி மாணவர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சென்னையில் அரங்கேறியுள்ளது. 

  திருநெல்வேலி மாவட்டத்தை சேர்ந்தவர் 19வயதான சல்மான். இவர் சென்னை தரமணியில் உள்ள தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கார் சட்டப் பல்கலைகழகத்தில் இரண்டாம் ஆண்டு பயின்று வந்துள்ளார். சல்மான் கல்லூரி அருகே தனியார் விடுதி ஒன்றில் தங்கி படித்து வந்துள்ளார். கடந்த சில தினங்களுக்கு முன்பு சல்மான் சொந்த ஊருக்கு சென்று சென்னை திரும்பிய நிலையில் விடுதியில் தான் தங்கியிருந்த அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

  சால்மானுடன் விடுதியில் வசிக்கும் சக நண்பர்கள் மாணவன் அறைக்கு சென்றபோது சல்மான் தூக்கிட்டபடி இருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தனர்.  இச்சம்பவம் குறித்து அருகில் உள்ள தரமணி காவல் நிலையத்திற்கு தகவல் அளித்துள்ளனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் சால்மானின் உடலை மீட்டு உடற்கூறு ஆய்விற்காக இராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்துள்ளனர்.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

  பின்னர் சல்மான் தற்கொலை செய்துகொண்ட அறையை சோதனை செய்தபோது சல்மான் தற்கொலை செய்துகொள்வதற்கு முன்பு எழுதிவைத்திருந்த கடிதம் ஒன்றை கைபற்றியுள்ளனர். அந்த கடிதத்தில் மரணத்திற்கு பிறகு என்ன நடக்கும் என்பதை நான் தெரிந்துகொள்ள ஆசைப்படுகிறேன் என்றும் தான் சேமித்து வைத்திருந்த ரூபாய் 5000 பணம் எனது அம்மாவிற்காக வைத்துள்ளேன் என்று தாய் மீதுள்ள பாசத்தை வெளிக்காட்டும் வகையில் உருக்கமான கடிதத்தை எழுதிவைத்துள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.

  Also Read: சென்னை ஓஎம்ஆர் சாலையில் கிடந்த மர்ம பெட்டியால் பரபரப்பு

  மேலும் தற்கொலைக்கான காரணம் குறித்து பல்வேறு கோணைங்களில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சட்டக் கல்லூரி மாணவன் கடிதம் எழுதிவைத்துவிட்டு தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

  மன அழுத்தம் ஏற்பட்டாலோ, தற்கொலை எண்ணம் உண்டானாலோ, அதனை மாற்ற, கீழ்காணும் எண்களுக்கு அழைக்கவும். மாநில உதவிமையம்: 104 ; சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் - 044 -24640050

  செய்தியாளர் :  ப.வினோத்கண்ணன் 

  Published by:Ramprasath H
  First published:

  Tags: Chennai, Commit suicide, Crime News, Death, Law, Tamil News, Tamilnadu