சென்னை வந்த விமானத்தின் டயரில் திடீர் கோளாறு... 114 பேர் உயிர்தப்பினர்

Web Desk | news18-tamil
Updated: October 9, 2019, 10:05 PM IST
சென்னை வந்த விமானத்தின் டயரில் திடீர் கோளாறு... 114 பேர் உயிர்தப்பினர்
மாதிரிப்படம்
Web Desk | news18-tamil
Updated: October 9, 2019, 10:05 PM IST
டெல்லியிலிருந்து சென்னைக்கு வந்த பயணிகள் விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு காரணமாக அவசரமாக தரையிறக்கப்பட்டதால் 114 பேர் உயிர் தப்பி உள்ளனர்.

சென்னை உள்நாட்டு முனையத்திற்கு டெல்லியில் இருந்து வந்த விமானத்தில் 108 பயணிகளும் 6 ஊழியர்கள் என மொத்தம் 114 பேர் வந்துள்ளனர். சென்னையில் தரையிறங்க தயாரான போது விமானத்தின் சக்கரங்களில் திடீரென தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டுள்ளது.

சென்னை விமான நிலைய கட்டுப்பாட்டு அறைக்கு உடனே தகவல் தெரிவிக்கப்பட்டது. பின்னர் விமானம் வானில் தொடா்ந்து வட்டமடித்தது. சென்னையில் அவசரமாக தரையிறங்குவதற்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் துரிதமாக செய்யப்பட்டன. இதையடுத்து விமானம் தரையிறங்க அனுமதி வழங்கப்பட்டது. பின்னர் விமானம் பத்திரமாக தரையிரக்கப்பட்டதால் விமானத்தில் இருந்த 114 பேரும் அதிர்ஷ்டவசமாக உயிா் தப்பினா்.


டெல்லியில் இருந்து வந்த விமானம் மீண்டும் சென்னையில் இருந்து இரவு 7 மணிக்கு மதுரைக்கு புறப்பட்டு செல்லும். ஆனால் தொழில்நுட்ப கோளாறை சரி செய்யும் பணி நடப்பதால் சுமார் 3 மணி நேர தாமதமாக புறப்பட்டு செல்லும் என்று அறிவிக்கப்பட்டது.

Also Watch 

First published: October 9, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...