கொரோனா தடுப்பு பணிகளில் ஈடுபட்ட வாகனங்களுக்கு சென்னை மாநகராட்சி 4 மாதங்களாக வாடகை வழங்கவில்லை- ஓட்டுநர்கள் குற்றச்சாட்டு

Youtube Video

சென்னையில் கொரோனா தடுப்பு பணிகளுக்காக ஈடுபடுத்தப்பட்ட வாகனங்களுக்கு, 4 மாதங்களாக மாநகராட்சி நிர்வாகம் உரிய வாடகை வழங்கவில்லை என ஓட்டுநர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

 • Share this:
  கொரோனா இரண்டாவது அலை பரவல் உச்சக்கட்டத்தில் இருக்கும்போது, தடுப்பு நடவடிக்கைகளுக்காக ஒப்பந்த அடிப்படையில் வாடகை கார்களை பயன்படுத்த சென்னை மாநகராட்சி நிர்வாகம் முடிவு செய்தது. அதன்படி, நோயாளிகள், மருத்துவர்கள், முன்கள பணியாளர்களை அழைத்துச் செல்லும் பணிக்காக, டி-டாக்சி நிறுவனத்திடம் இருந்து 600-க்கும் மேற்பட்ட கார்கள், பெரிய ரக வாகனங்கள் வாடகை அடிப்படையில் பயன்படுத்தப்பட்டன.

  மே மாத தொடக்கத்தில் சிறப்பு கார் ஆம்புலன்ஸ் சேவையும் மாநகராட்சி சார்பில் தொடங்கப்பட்டது. இதற்காக 10 மணி நேரத்திற்கு 1,400 ரூபாய் எனும் ஒப்பந்தத்தின்படி வாடகை கார்கள் செயல்பட்டு வந்தன. இந்த சூழலில், கடந்த மார்ச் முதல் 4 மாதங்களாக இயக்கப்பட்ட வாகனங்களுக்கு மாநகராட்சி சார்பில் 1,50,00,000 லட்சம் ரூபாய் வாடகையாக கொடுக்க வேண்டியுள்ளதாக கூறப்படுகிறது.

  டீசல் செலவுக்கு மட்டும் 30 லட்ச ரூபாய் கடன் வாங்கியிருப்பதாக கூறும் கார் ஓட்டுநர்கள், முறையாக வாடகை கொடுக்காததால், தங்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாக வேதனையோடு கூறுகின்றனர்.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

  இதுதொடர்பாக மாநகராட்சி நிர்வாகத்திடம், நியூஸ் 18 தொலைக்காட்சி செய்தியாளர் தொடர்பு கொண்டபோது, ஒரு வாரத்திற்குள் டி-டாக்சி நிறுவனத்துக்கான உரிய வாடகை செலுத்தப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். நான்கு மாதங்கள் உழைத்தற்கான நிலுவை தொகையை விரைந்து வழங்க வேண்டும் டி-டாக்சி நிறுவனம் கேட்டுக்கொண்டுள்ளது.
  Published by:Karthick S
  First published: