சிறப்பான ஏற்பாடுகள் தயார் - சுமார் 5 மாதங்களுக்குப் பிறகு சென்னையில் இன்று டாஸ்மாக் கடைகள் திறப்பு

கோப்புப் படம்.

சென்னையில் சுமார் 5 மாதங்களுக்குப் பிறகு மீண்டும் டாஸ்மாக் கடைகள் இன்று திறக்கப்பட உள்ளன. முகக்கவசம் அணிவதோடு, சமூக இடைவெளியை கடைபிடித்து வாடிக்கையாளர்கள் மதுபாட்டில்களை வாங்கிச் செல்ல வேண்டுமென அரசு அறிவுறுத்தியுள்ளது.

 • Share this:
  கொரோனோ தொற்று காரணமாக கடந்த 5 மாதங்களாக சென்னை மாநகர காவல் எல்லைக்கு உட்பட்ட பகுதியில் டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டன. தற்போது தொற்று சற்று குறைந்துள்ள நிலையில், இன்று முதல் மீண்டும் டாஸ்மாக் கடைகள் திறக்கப்படுகிறது. அதேசமயம், வணிக வளாகங்கள் மற்றும் நோய் கட்டுப்பாட்டு பகுதிகளில் உள்ள கடைகள் திறக்கப்படாது. சென்னை மண்டலத்தில் உள்ள மற்ற 720 டாஸ்மாக் கடைகளும் திறக்கப்பட உள்ளது.

  அதன்படி, டாஸ்மாக் கடைகள் காலை 10 மணி முதல் இரவு 7 மணி வரை திறந்திருக்கும். நாளொன்றுக்கு ஒரு கடையில் 500 டோக்கன்கள் மட்டுமே வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்படும். ஒரு மணி நேரத்தில் 50 டோக்கன் விநியோகம் செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதற்காக, பிளிச்சிங் பவுடரால் கடை முன்பு 50 வட்டங்கள் வரையப்பட்டுள்ளன.

  மேலும் படிக்க...ஸ்டெர்லைட் ஆலை மூடலுக்கு எதிரான வழக்கில் இன்று தீர்ப்பு - தெரிந்துகொள்ள வேண்டிய முக்கிய தகவல்கள்

  கடைக்கு வரும் வாடிக்கையாளர்கள் முகக்கவசம் அணிந்து, தனிமனித இடைவெளியை கடைபிடிக்க வேண்டும். அதாவது, வாடிக்கையாளர்கள் 3 அடி இடைவெளி விட்டு வரிசையில் நிற்க வேண்டும். கிருமிநாசினியை கொண்டு கைகளை சுத்தப்படுத்திய பிறகே,வாடிக்கையாளர்களை கவுன்டர்களுக்கு அருகே அனுமதிக்க வேண்டுமென ஊழியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

  போதிய இட வசதி இருந்தால், 2 கவுன்டர்களை அமைத்துக் கொள்ளவும், சாமியானா மற்றும் மைக் செட் ஏற்பாடு செய்ய வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது. கடைகளில் தேங்கும் குப்பையை உடனுக்குடன் அப்புறப்படுத்தப்பட வேண்டும். இந்த வழிமுறைகளை பின்பற்றாவிட்டால் கடைகள் திறக்கப்படாது என்றும் அரசு எச்சரித்துள்ளது.

  மேலும் படிக்க...கோவை காந்திபுரம் கல்யாண் ஜுவல்லரியில் 51 பேருக்கு கொரோனா - சுகாதாரத்துறையினர் போலீசில் புகார்

  சென்னையில் 5 மாதங்களுக்கு பிறகு டாஸ்மாக் கடைகள் திறக்கப்படுவதால், ஏற்கெனவே காலாவதியான மதுபாட்டில்களை அகற்றிவிட்டு, புதுவகை பாட்டில்களை நிரப்பும் பணி நடைபெற்றது.

  இந்த நிலையில், பிற மாவட்டங்களில் கொரோனா பரவியதில் டாஸ்மாக்கு பெரும்பங்குண்டு எனத் தெரிந்தும், சென்னையிலும் திறப்பது பெரும் தவறு என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். யார் பாதிக்கப்பட்டாலும், வருமானம் வந்தால் சரி என நினைப்பது மனிதாபிமானமற்ற செயல் என விமர்சித்துள்ள ஸ்டாலின், ஊரடங்கு காலத்தில் டாஸ்மாக் கடை வேண்டாம் என்று வலியுறுத்தியுள்ளார்.

  மேலும் படிக்க...சென்னையில் டாஸ்மாக் கடை திறப்பது மிக மோசமான முடிவு... டிடிவி தினகரன்  இதேபோல், சென்னையில் கொரோனா பாதிப்பை அதிகப்படுத்தும் ஆபத்து நிறைந்த இந்த முடிவை அரசு கைவிட வேண்டுமென அமமுக பொதுச்செயலாளர் டிடிவி.தினகரனும் வலியுறுத்தியுள்ளார்.
  Published by:Vaijayanthi S
  First published: