நாளை பிளஸ் 2 பொதுத்தேர்வு தொடக்கம்...! மாணவர்களுக்கு தேர்வுத்துறை விடுத்துள்ள அறிவிப்பு

நாளை பிளஸ் 2 பொதுத்தேர்வு தொடக்கம்...! மாணவர்களுக்கு தேர்வுத்துறை விடுத்துள்ள அறிவிப்பு
மாதிரிப் படம்
  • News18
  • Last Updated: March 1, 2020, 4:01 PM IST
  • Share this:
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 12-ம் வகுப்பு பொதுத் தேர்தவு நாளை தொடங்குகிறது. தேர்வில் ஆள்மாறாட்டம் செய்தால் வாழ்நாள் முழுவதும் தேர்வு எழுத தடைவிக்கப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

நாளை தொடங்கும் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வில் முதல்நாளில் தமிழ் பாடத்திற்கான தேர்வு நடைபெறவுள்ளது. தமிழகத்தில் மொத்தம் 8 லட்சத்து, ஆயிரத்து 401 மாணவர்கள் பொதுத்தேர்வினை எழுதுகின்றனர்.

புதுச்சேரியில் 14 ஆயிரத்து 958 மாணவர்கள் தேர்வு எழுதுகின்றனர். முதல் முறையாக இந்த ஆண்டு 12-ம் வகுப்பு மாணவர்கள் மாற்றி அமைக்கப்பட்ட புதிய பாடத்திட்ட அடிப்படையில் தேர்வு எழுதவுள்ளனர்.


அதன்படி, மொத்தம் 600 மதிப்பெண்களுக்கு தேர்வு நடைபெறுகிறது. காலை 10 மணிக்கு தொடங்கும் தேர்வு பிற்பகல் 1.15 வரை நடைபெறும். 3 மணி நேரத்துடன் கூடுதலாக 15 நிமிடங்கள் வினாத்தாளை வாசிப்பது உள்ளிட்டவற்றுக்காக ஒதுக்கப்பட்டுள்ளது.

நாளை தொடங்கும் பொதுத் தேர்வு, மார்ச் 24-ம் தேதி முடிவடைகிறது. தேர்வு முடிவுகள் ஏப்ரல் 24-ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

12-ம் வகுப்பு பொதுத்தேர்வை ஒட்டி முறைகேடுகளைத் தடுப்பதற்காக தமிழகம் முழுவதும் பறக்கும் படை அமைக்கப்பட்டுள்ளது. ஆள் மாறாட்டம் செய்தால் மாணவர்கள் வாழ்நாள் முழுவதும் பொதுத்தேர்வு எழுத தடை விதிக்கப்படும் என்று தேர்வுத்துறை எச்சரித்துள்ளது.அத்துடன், காப்பி அடித்தல், விடைத்தாளை மாற்றி எழுதுதல் போன்ற ஒழுங்கீன நடவடிக்கைகளில் ஈடுபடும் மாணவர்கள் தேர்வு கூடத்தில் இருந்து உடனடியாக வெளியேற்றப்படுவார்கள் என்றும், அவர்கள் 3 ஆண்டுகளுக்கு பொதுத்தேர்வு எழுத தடை விதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது.

 
First published: March 1, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்
corona virus btn
corona virus btn
Loading