உள்ளாட்சித்தேர்தலில் போட்டியிட இரு அணியாக மாறிய உறவினர்கள்...!

உள்ளாட்சித்தேர்தலில் போட்டியிட இரு அணியாக மாறிய உறவினர்கள்...!
News 18
  • News18
  • Last Updated: December 14, 2019, 2:03 PM IST
  • Share this:
நேற்று ஒரே நாளில் 70 ஆயிரம் பேர் மனுத் தாக்கல் செய்துள்ளதால் உள்ளாட்சித் தேர்தலில் வேட்பு மனு தாக்கல் செய்தவர்களின் எண்ணிக்கை ஒரு லட்சத்தை தாண்டியுள்ளது.

ஊரக உள்ளாட்சித் தேர்தலுக்கான வேட்பு மனுத் தாக்கல் கடந்த ஒன்பதாம் தேதி தொடங்கியபோதும் முதல் நான்கு நாட்களில் மனுத் தாக்கல் விறுவிறுப்பாக இல்லை. 38 ஆயிரத்து 15 பேர் மட்டுமே மனுத் தாக்கல் செய்திருந்தனர். இந்நிலையில் நேற்று ஒரே நாளில் 71 ஆயிரத்து 763 பேர் வேட்பு மனுத் தாக்கல் செய்துள்ளனர். அதனால் வேட்பு மனுத் தாக்கல் செய்துள்ளவர்களின் எண்ணிக்கை ஒரு லட்சத்து 9 ஆயிரத்து 778 ஆக உயர்ந்துள்ளது.

இன்று சனிக்கிழமை என்றபோதும் வேட்பு மனுக்களை தாக்கல் செய்யலாம் என தேர்தல் ஆணையம் ஏற்கெனவே அறிவித்துள்ளது. வேட்பு மனுத் தாக்கல் செய்ய இன்னும் 3 நாட்கள் அவகாசம் உள்ளதால் எண்ணிக்கை மேலும் உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.


இதனிடையே பல இடங்களில் உள்ளாட்சி பதவிகளை ஏலம் விடுவது தொடர்கதையாகி வருகிறது. திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட வலையூரில் ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர் பதவியை அதிமுக எம்எல்ஏ பரமேஸ்வரியின் கணவர் முருகன் 14 லட்ச ரூபாய்க்கு ஏலம் எடுத்துள்ளதாக புகார் எழுந்துள்ளது.

நேற்று முன்தினம் இரவு நடந்த ஏலத்தில் ஊராட்சித் தலைவர் பதவியை ரங்கராஜ் என்பவர் 10 லட்ச ரூபாய்க்கும், ஊராட்சி துணைத் தலைவர் பதவியை ஆனந்த் என்பவர் 2 லட்சத்து 92 ஆயிரம் ரூபாய்க்கும் ஏலம் எடுத்துள்ளதாக அப்பகுதி மக்கள் ஒன்றிய தேர்தல் வார்டு அலுவலர் சண்முகத்திடம் புகார் மனு அளித்துள்ளனர்.

காரைக்குடி அருகே உள்ள கோவிலூர் ஊராட்சித் தலைவர் பதவிக்கு மருமகளும், சின்ன மாமியாரும் போட்டியிடுகின்றனர். திமுக பிரமுகர் பரணிகிட்டுவின் மனைவி கவிதா வேட்பு மனுத் தாக்கல் செய்ய நேற்று தனது உறவினர்களுடன் வந்த நிலையில், அவரது சின்ன மாமியாரான அதிமுக முன்னாள் கவுன்சிலர் சுப்பிரமணியனின் மனைவி சுந்தரியும் உறவினர்களுடன் ஊர்வலமாக வந்திருந்தார்.இருவரும் அடுத்தடுத்து வேட்பு மனு தாக்கல் செய்தனர். அவர்களைப் போலவே உறவினர்களும் இரு அணியாக பிரிந்து இந்த தேர்தலை சந்திக்கின்றனர்.

ஆவடி அருகே வெள்ளானூர் ஊராட்சியின் 4வது வார்டு உறுப்பினர் பதவிக்கு போட்டியிடும் மளிகைக் கடை உரிமையாளர் சின்னசாமி மாடு ஒன்றுடன் வந்து வேட்பு மனுத் தாக்கல் செய்தார். தன்னைத் தேர்ந்தெடுத்தால் மாடுபோல் உழைப்பேன் என்பதை காட்டுவதற்காகவே மாட்டுடன் வந்ததாக அவர் தெரிவித்தார்.
First published: December 14, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading