அத்திவரதரை தரிசிக்க வந்தபோது 6 பேர் மரணமடைய காரணம் நெரிசல் அல்ல... உடல்நலக் குறைவே... - தமிழக அரசு விளக்கம்

பக்தர்களுக்கு மருத்துவம், சுகாதாரம் போக்குவரத்து உள்ளிட்ட அனைத்து வசதிகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும், இதுவரை 34 லட்சம் பேர் அத்திவரதரை தரிசனம் செய்துள்ளதாகவும் அரசு தரப்பில் கூறப்பட்டது.

அத்திவரதரை தரிசிக்க வந்தபோது 6 பேர் மரணமடைய காரணம் நெரிசல் அல்ல... உடல்நலக் குறைவே... - தமிழக அரசு விளக்கம்
அத்திவரதர்
  • News18
  • Last Updated: July 25, 2019, 10:39 PM IST
  • Share this:
அத்திவரதரை தரிசனம் செய்ய வரும் பக்தர்களுக்கு கூடுதல் வசதி செய்து தரக்கோரிய வழக்கின் தீர்ப்பை, சென்னை உயர்நீதிமன்றம் திங்கட்கிழமைக்கு ஒத்திவைத்துள்ளது.

காஞ்சிபுரம் அத்திவரதர் உற்சவத்தின் 25-வது நாளான இன்று, மஞ்சள் பட்டு உடுத்தி அத்திவரதர் பக்தர்களுக்கு காட்சியளித்தார். காலையில் லேசான சாரல் மழை பெய்த போதிலும், பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து தரிசனம் செய்தனர்.

அத்திவரதரை நாளுக்குநாள் லட்சக்கணக்கில் வந்து தரிசணம் செய்துவிட்டு செல்கின்றனர். கூட்ட நெரிசலை சமாளிக்க முடியாமல் போலீசாரும் திணறுகின்றனர்.


கூட்டம் அலைமோதுவதால் பக்தர்களுக்கான வரிசை                5-லிருந்து 7-ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. இதனால் பக்தர்கள் காத்திருக்கும் நேரம் 5-லிருந்து 7-மணி நேரமாக அதிகரித்துள்ளது. கடந்த 24 நாட்களில் 33,50,000 ஆயிரம் பக்தர்கள் தரிசனம் செய்துள்ளனர்.

இதனிடையே, ஒரே நேரத்தில் 2 மூலவரை தரிசிக்க முடியாது எனவும் அத்திவரதரை மீண்டும் குளத்தில் இறக்கும் வரை மூலவரை தரிசிக்க அனுமதி கிடையாது எனவும் தமிழக அரசு அறிவித்துள்ளது.

இந்நிலையில், அத்திவரதர் தரிசனம் செய்ய வரும் பக்தர்களுக்கு பாதுகாப்பு, மத்திய துணை ராணுவ பாதுகாப்பு, வரதராஜர் சன்னதி திறப்பு, உயிரிழந்தவர்களுக்கு ரூ.15 லட்சம் இழப்பீடு உள்ளிட்ட கோரிக்கைளுடன் உயர்நீதிமன்றத்தில் 5 வழக்குகள் தொடரப்பட்டுள்ளன.இந்த வழக்குகளை இன்று நீதிபதிகள் மணிக்குமார், சுப்பிரமணியன் பிரசாத் அமர்வு முன் விசாரணைக்கு வந்தன.

அப்போது, அத்திவரதரை தரிசிக்க வந்த 6 பேர் நெரிசலில் சிக்கி மரணமடையவில்லை என்றும் உடல்நலக்குறைவால் உயிரிழந்தனர் என்றும் தமிழக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

பக்தர்களுக்கு மருத்துவம், சுகாதாரம் போக்குவரத்து உள்ளிட்ட அனைத்து வசதிகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும், இதுவரை 34 லட்சம் பேர் அத்திவரதரை தரிசனம் செய்துள்ளதாகவும் அரசு தரப்பில் கூறப்பட்டது.

இதை பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், இந்த அனைத்து மனுக்கள் மீதும் திங்கட்கிழமை தீர்ப்பு வழங்கப்படும் என்று கூறி வழக்கை ஒத்திவைத்தனர்.

Also watch: ரஜினி பேசிய பஞ்ச் டயலாக்கில் மறைந்துள்ள அரசியல்

First published: July 25, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading