திமுகதான் மாற்றம் தரும் என்று மக்கள் நம்புகின்றனர் - தமிழச்சி தங்கபாண்டியன்

மத்திய அமைச்சர் நிதின் கட்காரி கருத்திற்கு, கூட்டணி கட்சியில் இருப்பவர்கள் தான் விளக்கம் பெற வேண்டும் என்றும்,  அவர்களின் வேஷம் களைய வேண்டும் என்றும் தமிழச்சி தங்கபாண்டியன் தெரிவித்தார்.

திமுகதான் மாற்றம் தரும் என்று மக்கள் நம்புகின்றனர் - தமிழச்சி தங்கபாண்டியன்
தமிழச்சி தங்கபாண்டியன்
  • News18
  • Last Updated: April 17, 2019, 3:21 PM IST
  • Share this:
ஆளுங்கட்சி மீது இருக்கக்கூடிய அதிருப்தி, மத்தியில் இருக்கக்கூடிய மோடி ஆட்சியின் மீது இருக்கக்கூடிய அதிருப்தி ஆகியவை காரணமாக திமுக மட்டும் தான் மாற்றம் தரும் என்று மக்கள் நம்புகிறார்கள் என்று தமிழச்சி தங்க பாண்டியன் தெரிவித்துள்ளார்.

திமுக தரப்பில் கொடுக்கப்பட்டுள்ள தேர்தல் அறிக்கை, ஆளுங்கட்சி மீது இருக்கக்கூடிய அதிருப்தி, மத்தியில் இருக்கக்கூடிய மோடி ஆட்சியின் மீது இருக்கக்கூடிய அதிருப்தி ஆகியவை காரணமாக திமுக மட்டும்தான் மாற்றம் என்று மக்கள் நம்புகிறார்கள்.

தென் சென்னை திமுக வேட்பாளர் தமிழச்சி தங்கபாண்டியன் இறுதி நாளான இன்று தீவிர பரப்புரையில் ஈடுபட்டு உள்ளார். முன்னெப்போதும் இல்லாத வகையில் தொகுதிக்குட்பட்ட அனைத்து வட்டங்களுக்கும் சென்று பரப்புரை நிறைவு செய்யும் வகையில் திட்டமிட்டு, இன்று காலை 7 மணி முதல் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளார்.


பிரசாரத்திற்கு இடையே செய்தியாளர்களிடம் பேசிய தமிழச்சி தங்கபாண்டியன், இதுவரை இப்படி ஒரு பிரச்சாரம் மேற்கொண்டது இல்லை என்று தெரிவித்தார்.

காலை 7 மணி முதல் மாலை வரை அனைத்து வட்டங்களிலும் பிரச்சாரம் மேற்கொள்ளப்படுகிறது. பொது மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு உள்ளது. எழுச்சியுடன் மக்கள் எங்களை வரவேற்கிறனர் என்றும் தமிழச்சி தங்க பாண்டியன் தெரிவித்துள்ளார்.

மக்களின் பெரும் நம்பிக்கையில் பிரச்சாரத்தை நிறைவு செய்கிறோம் என்ற தமிழச்சி தங்கபாண்டியன், திமுகவினர் 100% வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கை உள்ளது என்றும் தெரிவித்தார்.மேலும், ஆளுங்கட்சி மீது இருக்கக்கூடிய அதிருப்தி, மத்தியில் இருக்கக்கூடிய மோடி ஆட்சியின் மீது இருக்கக்கூடிய அதிருப்தி ஆகியவை காரணமாக திமுக மட்டும் தான் மாற்றம் தரும் என்று மக்கள் நம்புகிறார்கள் என்று தமிழச்சி தங்க பாண்டியன் தெரிவித்துள்ளார்.

மத்திய அமைச்சர் நிதின் கட்காரி கருத்திற்கு, கூட்டணி கட்சியில் இருப்பவர்கள் தான் விளக்கம் பெற வேண்டும் என்றும்,  அவர்களின் வேஷம் களைய வேண்டும் என்றும் தமிழச்சி தங்கபாண்டியன் தெரிவித்தார்.

Also see...


தேர்தல் செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க.  அரசியல் செய்திகள், தேர்தல் பிரசார வீடியோக்கள், சுவாரஸ்யமான வீடியோக்கள், விவாதங்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.First published: April 16, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading