சோழிங்கநல்லூருக்கு மருத்துவமனை கொண்டுவரப்படும் - தமிழச்சி தங்கபாண்டியன்

தொகுதியின் அனைத்து பிரச்சனைகளையும் அறிந்து வைத்துள்ளேன். நான் வெற்றி பெற்ற பிறகு சரி செய்து தருவேன் என்று திமுக தென் சென்னை வேட்பாளர் தமிழச்சி தங்கபாண்டியன் தெரிவித்துள்ளார்.

சோழிங்கநல்லூருக்கு மருத்துவமனை கொண்டுவரப்படும் - தமிழச்சி தங்கபாண்டியன்
தமிழச்சி தங்கபாண்டியன்
  • News18
  • Last Updated: April 17, 2019, 3:21 PM IST
  • Share this:
நான் வெற்றி பெற்ற பிறகு சோழிங்கநல்லூர் பகுதியில் மருத்துவமனை கொண்டுவரப்படும் என திமுக வேட்பாளர் தமிழச்சி தங்கபாண்டியன் தெரிவித்தார்.

திமுக தென் சென்னை வேட்பாளராக தமிழச்சி தங்கபாண்டியன் போட்டியிடுகிறார். அதிமுக சார்பில் தற்போதைய தென்சென்னை எம்பியும், அமைச்சர் ஜெயக்குமாரின் மகனுமான ஜெயவர்தன் போட்டியிடுகிறார்.

மக்கள் நீதி மய்யம் கட்சியின் சார்பில் தென்சென்னை தொகுதியில் ரங்கராஜன் போட்டியிடுகிறார்.


தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், தமிழச்சி தங்கபாண்டியன் தி.நகர் பகுதிக்கு உட்பட்ட கலைஞர் பூங்காவில் இன்று காலை பிரசாரம் மேற்கொண்டார். அப்போது நடை பெயற்சி செய்தவர்களிடம் வாக்கு சேகரித்தார். அதன்பின் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது பேசிய அவர், “இந்த தொகுதியின் அனைத்து பிரச்சனைகளையும் அறிந்து வைத்துள்ளேன். நான் வெற்றி பெற்ற பிறகு சரி செய்து தருவேன்.  குறிப்பாக சோழிங்கநல்லூர் பகுதியில் மருத்துவமனை கொண்டுவரப்படும்.

பெருங்குடி பகுதியில் உள்ள குப்பையை மறுசுழற்சி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் போக்குவரத்து பிரச்சனை சரி செய்துதரப்படும். பிறகு திமுக தேர்தல் அறிக்கை உள்ள அனைத்தும் நிறைவேற்றி தரப்படும்” என்று கூறினார்.Also see...சேலத்தில் தவறான உறவால் பெண் கொடூரமாகக் கொலை!
First published: March 28, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading