தமிழகத்துக்கு வாய்ப்புகள் வரும் - தமிழிசை சவுந்தரராஜன் பேட்டி

ரவீந்திரநாத் குமாருக்கு அமைச்சர் பதவி வழங்குவது, குறித்து தற்போது நான் எந்த கருத்தையும் சொல்ல விரும்பவில்லை என்று தமிழிசை கூறியுள்ளார்.

தமிழகத்துக்கு வாய்ப்புகள் வரும் - தமிழிசை சவுந்தரராஜன் பேட்டி
தமிழிசை செளந்தரராஜன்
  • News18
  • Last Updated: May 31, 2019, 11:27 AM IST
  • Share this:
தமிழகத்தில் பாஜக பலம்பெற பலம்பெற மத்திய அமைச்சரவையில் தமிழகத்தின் பிரதிநிதிகள் அதிகரிப்பார்கள் என பாஜக மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார். 

மோடி பதவியேற்பு விழாவில் பங்கேற்ற பின்னர் சென்னை திரும்பிய அவர் விமானநிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார்.

அப்போது  தமிழகத்திற்கு மத்திய அமைச்சரவையில் இடம் இல்லாததற்கு என்ன காரணம் என்ற கேள்விக்கு பதிலளித்தவர்,


தமிழகத்திற்கு நிறைய வாய்ப்புகள் வரும். மோடியின் தலைமையில் பதவி ஏற்றுள்ள இந்த அமைச்சரவை இந்தியாவை வல்லரசு நாடாக மாற்ற எடுத்துச் செல்லும். இன்னும் பல மாநிலங்களில் பல வெற்றிகள் பாஜக குவிக்க உள்ளது. தமிழகம் இன்னும் அதிகம் பலம் பெற இருக்கிறது. அதனால், தமிழகத்திற்கு அதிக பிரதிநிதித்துவம் இருக்கும் என்றார்.

மேலும் மக்களுக்கு துன்பம் தரக்கூடிய எந்த திட்டமாக இருந்தாலும், அதை இந்த அரசு ஆதரிக்கப் போவது இல்லை.
தவறான பிரச்சாரங்கள்தான் பரப்பப்பட்டு வருகின்றன.தமிழகத்தின் மீது பாஜகவிகிற்கு அக்கறை இல்லாதது போல ஒரு தோற்றத்தை ஏற்படுத்த முயற்சித்து வருகிறார்கள்.
ஆனால், பாஜக-விற்கு தமிழகத்தின் மீது அக்கறை இருக்கிறது. தமிழகத்திற்கு பல நல்ல திட்டங்களை கொண்டு வருவோம் என்று உறுதி அளித்தார்.

அதனைத் தொடர்ந்து ஓபிஸ் மகனுக்கு அமைச்சர் பதவி வழங்குவது குறித்து கேட்ட கேள்விக்கு பதிலளித்தவர்,  ரவீந்திரநாத் குமாருக்கு அமைச்சர் பதவி வழங்குவது, குறித்து தற்போது நான் எந்த கருத்தையும் சொல்ல விரும்பவில்லை. அது குறித்து அமித்ஷாவும், மோடியும் முடிவெடுப்பார்கள் என்று கூறினார்.

Also see... நாடு முழுவதும் உள்ள பாஜக தொண்டர்கள் உற்சாகம்!

Also see... 
தேர்தல் செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க. அரசியல் செய்திகள், தேர்தல் பிரசார வீடியோக்கள், சுவாரஸ்யமான வீடியோக்கள், விவாதங்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.First published: May 31, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading