Home /News /tamil-nadu /

சென்னையில் அம்மோனியம் நைட்ரேட் - சுங்கத்துறை விளக்கத்திற்கு நேரெதிராக மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் அறிக்கை

சென்னையில் அம்மோனியம் நைட்ரேட் - சுங்கத்துறை விளக்கத்திற்கு நேரெதிராக மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் அறிக்கை

கோப்புப் படம்

கோப்புப் படம்

அம்மோனியம் நைட்ரேட் இருக்கும் கண்டெய்னர்களின் இருப்பிடத்தை குறித்து அவை இடமாற்றம் செய்யப்படும் வரை பாதுகாப்பிற்காக பணியாளர்களை நியமிக்க வேண்டும் என்று மாசு கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது.

சென்னை மணலியில் அம்மோனியன் நைட்ரேட் வைக்கப்பட்டிருப்பது தொடர்பாக மாசு கட்டுப்பாட்டு வாரியத்திடம் தமிழக அரசு தெரிவித்த தகவலின் அடிப்படையில் வாரியத்தின் இணை தலைமை சுற்றுச்சூழல் பொறியாளர் மலையாண்டி தலைமையில் 3 அதிகாரிகள் மற்றும் தீயணைப்புறை இயக்குனர் , துணை இயக்குனர் மற்றும் சட்டம் ஒழுங்கு காவல் ஆய்வாளர் ஆகியோர் கொண்ட குழு நேரில் ஆய்வு செய்து அரசிற்கு அறிக்கை ஒன்றை சமர்ப்பித்தது.

அறிக்கையின்படி அம்மோனியம் நைட்ரேட் தற்போது வைக்கப்பட்டிருக்கும் இடமானது பல ஏற்றுமதி இறக்குமதியாளர்களின் கண்டெய்னர்களை வைக்கும் கிடங்காகும். இந்த கிடங்கிலிருந்து 700 மீட்டர் தொலைவில் உள்ள மணலி டவுனில் 7000 பேரும், சடையான்குப்பத்தில் 5000 பேரும் என மொத்தமாக 12,000 பேர் வசிப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், இது சுங்கத்துறை அளித்த விளக்கத்திற்கு நேரெதிராக உள்ளது.

அம்மோனியம் நைட்ரேட் வைக்கப்பட்டுள்ள கண்டெய்னர்


இந்த விவகாரம் தொடர்பால நேற்று சுங்கத்துறை அளித்த அறிக்கையில் அம்மோனியம் நைட்ரேட் கிடங்கு இருக்கும் பகுதியிலிருந்து 2 கி.மீ சுற்றளவில் குடியிருப்புகள் இல்லை என்று தெரிவித்திருந்தது. இதன் மூலம் சுங்கத்துறை ஏன் இப்படியொரு தவறான தகவலை தெரிவித்தது என்ற கேள்வி எழுந்துள்ளது.

மேலும் வாரியத்தின் அறிக்கையில் கிடங்கு 18 ஏக்கர் பரப்பளவுடையது. 2001-ம் ஆண்டிலிருந்து செயல்பாட்டில் உள்ள இந்த கிடங்கு நரசிம்மன் என்பவருக்கு சொந்தமானது. தற்போது சுங்கத்துறையின் கட்டுப்பாட்டில் இந்த அம்மோனியம் நைட்ரேட்டானது இந்த கிடங்கில் 2015-ம் ஆண்டு செப்டம்பர் 27-ம் தேதியிலிருந்து வைக்கப்பட்டுள்ளது.

இந்த கிடங்கில் மொத்தம் 37 கண்டெய்னர்களில் ஒரு கண்டெய்னருக்கு 20டன் வீதம் 740 டன் அம்மோனியம் நைட்ரேட் படிக நிலையில் 25 கிலோகிராம் பாலிபுரொப்பீலின் பைகளில் அடைத்து வைக்கப்பட்டுள்ளது. இந்த அம்மோனியம் நைட்ரேட்டை தேவைப்படுவோருக்கு வழங்குவதற்கான ஏல அறிவிப்பு ஏற்கெனவே விடப்பட்டுள்ளதாகவும் இன்னும் 3 நாட்களில் இடமாற்றம் செய்வதற்கான அனைத்து நடவடிக்கைகள முடிந்து விடும் என்று மாசு கட்டுப்பாட்டு வாரியக் குழு தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.

மேலும், சேமித்து வைக்கப்பட்டிருக்கும் அம்மோனியம் நைட்ரேட் அனைத்தையும் உடனடியாக சுங்கத்துறை இடமாற்றம் செய்ய வேண்டும். தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார இயக்குனர் கண்டெய்னர் வைக்கப்பட்டிருக்கும் இடத்தை நேரடியாக ஆய்வு செய்து உற்பத்தியாளர் சேமிப்பு மற்றும் அபாயகரமான வேதிப்பொருள் இறக்குமதி விதிகள் 1989-ன் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கண்டெய்னர்கள் வைக்கப்பட்டிருக்கும் இடத்தின் உரிமையாளர் 740 டன் அம்மோனியம் நைட்ரேட் இருக்கும் கண்டெய்னர்களின் இருப்பிடத்தை குறித்து அவை இடமாற்றம் செய்யப்படும் வரை பாதுகாப்பிற்காக பணியாளர்களை நியமிக்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது.
Published by:Vaijayanthi S
First published:

Tags: Pollution Control board

அடுத்த செய்தி