ஜெயலலிதாவின் பிறந்த நாளில் ரூ.2000 நிதியுதவி திட்டம் தொடக்கம்!

ஃபிப்ரவரி 24-ம் தேதி பிரதமர் மோடி விவசாயிகளுக்கான நிதியுதவி திட்டத்தைத் தொடக்கிவைக்க உள்ளார்.

Tamilarasu J | news18
Updated: February 20, 2019, 1:02 PM IST
ஜெயலலிதாவின் பிறந்த நாளில் ரூ.2000 நிதியுதவி திட்டம் தொடக்கம்!
முதல்வர் எடப்பாடி பழனிசாமி
Tamilarasu J | news18
Updated: February 20, 2019, 1:02 PM IST
வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ள ஏழைத்தொழிலாளர்கள் பயன்பெறும் வகையில், தமிழக அரசால் அறிவிக்கப்பட்ட 2000 ரூபாய் சிறப்பு நிதி திட்டம், வரும் 24ம் தேதி தொடங்கப்பட உள்ளது.

தமிழகத்தில் வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ள 60 லட்சம் குடும்பகளுக்கு இரண்டாயிரம் ரூபாய் சிறப்பு நிதி வழங்கப்படும் என்று சட்டப்பேரவையில் 110 வது விதியின் கீழ் முதலமைச்சர் பழனிசாமி அறிவித்தார்.

மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் பிறந்தநாளான 24ம் தேதி, இத்திட்டத்தை தொடங்குவதற்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இத்திட்டத்தை முதலமைச்சர் பழனிசாமி தொடங்கி உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

இம்மாத இறுதிக்குள் தொழிலாளர்களின் வங்கிக்கணக்கில் பணம் செலுத்தப்படும் என முதல்வர் அறிவித்திருந்த நிலையில், வரும் 24ம் தேதி இத்திட்டம் தொடக்கப்பட்டதும், தொழிலாளர்களின் வங்கிக்கணக்கில் உடனடியாகப் பணம் செலுத்தப்படுவதற்கான பணிகளில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.

இதே ஃபிப்ரவரி 24-ம் தேதி பிரதமர் மோடி விவசாயிகளுக்கான நிதியுதவி திட்டத்தைத் தொடக்கிவைக்க உள்ளார் என்றும் கூறப்படுகிறது.

மேலும் பார்க்க: பாகிஸ்தான் பொருட்களுக்கு வரி 200% ஆக உயர்வு - அருண் ஜெட்லி அதிரடி
First published: February 20, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...