இன்று தொடங்குகிறது சட்டப்பேரவைக் கூட்டத் தொடர்! தண்ணீர் பிரச்னையை எழுப்ப எதிர்கட்சிகள் திட்டம்

ஜூலை 30-ம் தேதிவரை 23 நாட்களுக்கு சட்டப்பேரவைக் கூட்டத் தொடர் நடைபெற உள்ளது. 

இன்று தொடங்குகிறது சட்டப்பேரவைக் கூட்டத் தொடர்! தண்ணீர் பிரச்னையை எழுப்ப எதிர்கட்சிகள் திட்டம்
தமிழக சட்டசபை
  • News18
  • Last Updated: June 28, 2019, 7:18 AM IST
  • Share this:
பரபரப்பான அரசியல் சூழலில் தமிழக சட்டப்பேரவைக் கூட்டத் தொடர் இன்று தொடங்குகிறது. இதில், தண்ணீர் பிரச்சினை, ஸ்டெர்லைட், ஹைட்ரோகார்பன் திட்டம், மேகதாது உள்ளிட்ட விவகாரங்களை எழுப்ப தி.மு.க உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளன.

தமிழக சட்டப்பேரவையில் நடப்பு நிதியாண்டுக்கான பட்ஜெட், கடந்த பிப்ரவரி 8-ம் தேதி தாக்கல் செய்யப்பட்டது. மக்களவைத் தேர்தல் காரணமாக, மானியக் கோரிக்கைகள் மீதான விவாதம் நடைபெறாமலேயே சட்டப்பேரவை ஒத்தி வைக்கப்பட்டது. இந்நிலையில், சட்டப்பேரவைக் கூட்டத் தொடர் இன்று தொடங்குகிறது.

காலை 10 மணிக்கு அவை கூடியதும், விக்கிரவாண்டி சட்டமன்ற உறுப்பினராக இருந்த ராதாமணி, சூலூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினராக இருந்த கனகராஜ் ஆகியோரின் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டு அவை ஒத்தி வைக்கப்படும்.


வரும் திங்கட்கிழமை முதல் துறைவாரியாக மானியக் கோரிக்கைகள் மீதான விவாதம் நடைபெற்று, அதற்கு அமைச்சர்கள் பதிலளிப்பார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

ஜூலை 30-ம் தேதிவரை 23 நாட்களுக்கு சட்டப்பேரவைக் கூட்டத் தொடர் நடைபெற உள்ளது.

மானியக் கோரிக்கைகள் மீதான விவாதத்தின் முதல் நாளான வரும் திங்கட்கிழமை, சபாநாயகர் மீது தி.மு.க கொண்டு வந்துள்ள நம்பிக்கையில்லாத் தீர்மானம் மீது விவாதம் நடத்தப்படும்.இந்தக் கூட்டத் தொடரில் தமிழகத்தில் நிலவும் தண்ணீர் பிரச்சினை, ஸ்டெர்லைட் விவகாரம், ஹைட்ரோகார்பன் திட்டம், மேகதாது அணை விவகாரம் உள்ளிட்ட பிரச்சினைகளை எழுப்ப தி.மு.க உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளன.

அ.தி.மு.க எம்.எல்.ஏ-க்கள் கூட்டம் இன்று கூடுகிறது

சட்டமன்றக் கூட்டத் தொடரில் எவ்வாறு செயல்படுவது என்பது குறித்து ஆலோசனை நடத்த தி.மு.க மற்றும் அ.தி.மு.க எம்எல்ஏ-க்கள் கூட்டம் இன்று நடைபெறுகிறது. அ.தி.மு.க தலைமை அலுவலகத்தில் ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி ஆகியோர் தலைமையில் காலை 11 மணிக்கு அ.தி.மு.க எம்.எல்.ஏ-க்கள் கூட்டம் நடைபெற உள்ளது.

 தி.மு.க எம்.எல்.ஏ-க்கள் கூட்டம் இன்று கூடுகிறது

இதேபோல, அண்ணா அறிவாலயத்தில் தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் காலை 11 மணிக்கு தி.மு.க எம்.எல்.ஏ-க்கள் கூட்டம் நடைபெற உள்ளது.

மேலும் படிக்க...
அரசியல், சினிமா, வைரல், செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க. சுவாரஸ்யமான வீடியோக்கள், விவாதங்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.First published: June 28, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading