சைக்கிள் பயிற்சியின்போது மு.க ஸ்டாலின் அணிந்திருந்த டீ ஷர்ட்: சமூகவலைதளங்களில் வைரலாகும் டீ ஷர்ட் வாசகம்..

தமிழ் எங்கள் உயிர் என்ற வாசகம் தாங்கிய டி-ஷர்ட் அணிந்தவாறு தனது புகைப்படத்தை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ளார்.

  • News18 Tamil
  • Last Updated: September 16, 2020, 1:15 PM IST
  • Share this:
திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், இன்று காலை சைக்கிள் பயிற்சியில் ஈடுபட்டிருந்தபோது எடுக்கப்பட்ட புதிய புகைப்படம் வெளியிடப்பட்டுள்ளது. அண்மைக்காலமாக மு.க.ஸ்டாலின் சைக்கிள் பயிற்சி மேற்கொள்ளும் வீடியோ மற்றும் படங்கள் வெளியாகி, சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகின்றன.

அந்தவரிசையில் "தமிழ் எங்கள் உயிர்" என அச்சிடப்பட்ட டீ-சர்ட் அணிந்து கொண்டு மு.க. ஸ்டாலின் சைக்கிள் பயிற்சி மேற்கொண்ட போது எடுக்கப்பட்ட படம் வெளியாகியுள்ளது.

மேலும் படிக்க...அண்ணா படத்திற்கு ஏன் மாலை அணிவிக்கவில்லை? பேரவையில் துரைமுருகன் ஆதங்கம்

ஏற்கனவே இந்தி தெரியாது போடா என்ற வாசகம் பொறித்த டி-ஷர்ட் டிரெண்ட் ஆகி வரும் நிலையில் இப்போது தமிழ் எங்கள் உயிர் என்ற வாசகம் தாங்கிய டி-ஷர்ட் டிரெண்ட் ஆகத் தொடங்கியுள்ளது. இதேபோல் ” பேன் நீட் ”என்ற வாசகத்தை கொண்ட முகக்கவசத்தை திமுக-வினர் சட்டமன்றத்திற்கு அணிந்து வந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
First published: September 16, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading