யூடியூப் வீடியோவில் பேசிய பெண் பணம் பெற்று பேசியதாக தகவல்... சம்மன் அனுப்ப போலீஸ் முடிவு

Youtube Video

யூடியூப் சேனலில் பேசிய பெண்ணுக்கு சம்மன் அனுப்பி விசாரிக்க போலீசார் முடிவு செய்துள்ளனர்.

 • Share this:
  சென்னை பெசன்ட் நகர் கடற்கரையில் நடைப்பயிற்சி மற்றும் கடற்கரையை பார்க்க வரும் பெண்களிடம் ஆபாசமான கேள்விகளை கேட்டு அதற்கு பதில் அளிக்குமாறு, சென்னை டாக் என்ற யூடியூப் சேனல் தொந்தரவு செய்வதாக காவல்துறையினருக்கு புகார் வந்தது. இதனடிப்படையில் சாஸ்திரிநகர் போலீசார் விசாரணை செய்ததில் பெசன்ட் நகர் கடற்கரையில், அடிக்கடி பெண்களை வற்புறுத்தி ஆபாசமாக பேட்டி எடுப்பதாக தெரியவந்தது.

  இதனையடுத்து பெசன்ட்நகர் நகர் ஊரூர் குப்பம் பகுதியைச் சேர்ந்த லட்சுமி என்பவர் கொடுத்த புகாரின் அடிப்படையில் சாஸ்திரிநகர் போலீசார் வழக்கு பதிவு செய்தனர். போலீசார் தொடர்ந்து விசாரணை செய்ததில் சென்னை டாக்ஸ் என்ற யூடியூப் சேனல் இதுபோன்று 200-க்கும் மேற்பட்ட வீடியோக்கள் வெளியிட்டு 7 கோடி பேர் பார்த்திருப்பதாக தெரிவித்துள்ளனர்.

  அவர்களிடம் பறிமுதல் செய்யப்பட்ட மொபைல்களை போலீசார் ஆய்வு செய்த போது, அதில் இணையத்தில் பதியப்படாத நூற்றுக்கணக்கான வீடியோக்கள் இருப்பது தெரியவந்துள்ளது. இவர்கள் தனியாக பீச்ச்சில் அமர்ந்திருக்கும் பெண்களிடம் ஆபாச கேள்விகள் கேட்டு அதை மொபைலில் பத்திரபடுத்தி வைத்திருப்பதும் தெரியவந்துள்ளது. இதனை வைத்து பெண்களுக்கு இவர்கள் மிரட்டல் விடுத்துள்ளனரா? என்ற கோணத்தில் போலீசார் விசாரணையில் இறங்கியுள்ளனர். மேலும் ஆபாசமாக வீடியோக்கள் வெளியிடப்பட்ட சென்னை டாக்ஸ் யூடியூப் சேனலை முடக்குவதற்கு போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

  இந்நிலையில் சம்பந்தப்பட்ட வீடியோவில் பேசிய அந்தப் பெண் யூடியூபில் என்ன நடந்தது என்பது குறித்து இனையதளம் ஒன்றிற்கு  பேட்டியளித்திருக்கிறார்.

  அவர் கூறியதாவது, நான் கின்னஸ் ரெக்கார்ட் செய்த ஒரு பெண். ஒரு படத்தில் நடித்திருக்கிறேன். அதெல்லாம் யாருக்கும் தெரியாது. என்னை அப்படி பேசவைக்க ரூ.1500 பணம் கொடுத்தனர். கமெண்ட் பகுதியை ஆஃப் செய்ய சொல்லியிருந்தேன். ஆனால் அவர்கள் செய்யவில்லை. கிறிஸ்துமஸ் தினத்துக்கு பின்னர் தான் இந்த வீடியோ எடுக்கப்பட்டது. கெட்ட வார்த்தை எல்லாம் பேச வேண்டும் என்று சொன்னார்கள். இதற்கு முன்னர் நிறைய பெண்களை பணம் கொடுத்து பேச வைத்திருக்கிறார்கள். அவர்களின் மனக்குமுறலை என்னிடம் தெரிவித்தனர்.

  ஒரு பெண்ணுக்கும் பேச்சுரிமை இருக்கிறது. எல்லோருக்கும் தெரிந்ததை தான் நான் பேசியிருக்கிறேன். சேனல்காரர்களிடமே கேட்டுப் பாருங்கள். அவர்கள் ஸ்கிரிப்ட் எழுதிக் கொடுத்து பேச வைத்தது தெரிய வரும். ” இவ்வாறு அந்தப் பெண் கூறியுள்ளார். மேலும், போலீஸில் தான் புகார் அளித்திருப்பதாக அந்த வீடியோவில் சொல்லியிருக்கிறார்.

  இந்நிலையில், பணம் பெற்று கொண்டு தான் பேட்டி அளித்ததாக  தெரியவந்துள்ளதையடுத்து, யூடியூப் சேனலில் பேசிய பெண்ணிற்கு சம்மன் அனுப்பி போலீசார் விசாரணை நடத்த முடிவு செய்துள்ளனர்.

  மேலும், காவல்நிலையத்தில் புகார் அளிக்காத நிலையில் , அந்த பெண் புகார் அளித்தாக பொய்யான தகவலை பரப்பி வருவதாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
  Published by:Sheik Hanifah
  First published: