தஹில் ரமானியின் ராஜினாமாவை ஏற்றுக்கொண்டார் குடியரசுத் தலைவர்

news18
Updated: September 21, 2019, 8:36 AM IST
தஹில் ரமானியின் ராஜினாமாவை ஏற்றுக்கொண்டார் குடியரசுத் தலைவர்
தஹில் ரமானி
news18
Updated: September 21, 2019, 8:36 AM IST
சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி தஹில் ரமானியின் ராஜினாமாவை குடியரசுத் தலைவர் ஏற்றுக்கொண்டார்.

சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக இருந்த தஹில் ரமானியை மேஹாலயா உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக இடமாற்றம் செய்து உச்சநீதிமன்ற கொலீஜியம் சட்ட அமைச்சகத்துக்கு பரிந்துரைத்தது. கொலீஜியத்தின் பரிந்துரையை தன்னால் ஏற்க முடியாது எனக் கூறி தஹில் ரமானி குடியரசுத் தலைவருக்கு ராஜினாமா கடிதம் எழுதியிருந்தார். இந்நிலையில், தஹில் ரமானியின் ராஜினாமா கடிதத்தை ஏற்பதாக குடியரசுத் தலைவர் மாளிகை அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது. மேலும் சென்னை உயர்நீதிமன்றத்துக்கு தற்காலிக பொறுப்பு தலைமை நீதிபதியாக வினீத் கோத்தாரியை நியமித்தும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

 


First published: September 21, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...