தண்ணீர் பிரச்னையால் தனியார் மருத்துவமனையில் அறுவை சிகிச்சை தள்ளி வைப்பு - நோயாளிகள் அவதி

தண்ணீர் பிரச்னையால் தனியார் மருத்துவமனையில் அறுவை சிகிச்சை தள்ளி வைப்பு - நோயாளிகள் அவதி
அறுவை சிகிச்சை - கோப்புப் படம்
  • News18
  • Last Updated: July 5, 2019, 8:55 PM IST
  • Share this:
தண்ணீர் பிரச்னையால் மருத்துவமனையில் அறுவை சிகிச்சைகள் தள்ளிவைக்கப்பட்டுள்ளன. இதனால் நோயாளிகள் அவதிக்குள்ளாகியுள்ளனர்.

சென்னை குரோம்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனையில் நாளொன்றுக்கு 25 முதல் 30 அறுவை சிகிச்சைகள் செய்யப்படுகின்றன.  தற்போது தண்ணீர் தட்டுப்பாடு இருப்பதால் 15 முதல் 18 பேருக்கு மட்டுமே அறுவை சிகிச்சைகள் நடப்பதாக மருத்துவமனையின் இயக்குனர் தெரிவித்துள்ளார்.

மிக அவசர தேவையாக இருப்பவர்களுக்கு மட்டும் தற்போது அறுவை சிகிச்சை நடைபெறுவதாகவும், மற்ற நோயாளிகளை சிறிது காலம் கழித்து அறுவை சிகிச்சை செய்து கொள்ளலாம் என்று சொல்லி வருவதாகவும் தெரிவித்தார்.


மருத்துவமனையை பொருத்தவரையில் ஆபரேஷன் தியேட்டர் சுத்தப்படுத்துவது, மருத்துவ கருவிகளை சுத்தப்படுத்துவது, அறுவை சிகிச்சை முடிந்த பின்னர் சில நாட்கள் நோயாளிகள் மருத்துவமனையிலேயே தங்கி இருக்கும்போது அவர்களது அறைக்கு தேவையான அளவுக்கு தண்ணீர் கொடுப்பது என ஏராளமான அளவுக்கு தண்ணீர் செலவாகிறது.

ஆனால் தனியார் லாரிகள் மூலம் வரக்கூடிய தண்ணீரும் தற்போது கிடைக்காமல் இருப்பதால் அடுத்து வரும் நாட்களில் என்ன செய்வது என்று தெரியாமல் குழப்பத்தில் உள்ளதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவிக்கிறது. எனவே தமிழக அரசு மருத்துவமனைகளுக்கு மட்டுமாவது போதுமான தண்ணீர் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது முக்கிய கோரிக்கையாக வைக்கின்றனர்.

படிக்க: தண்ணீர் பஞ்சத்தால் பள்ளிகள் எடுத்த அதிரடி முடிவு!வீடியோ பார்க்க: தண்ணீர் தட்டுப்பாட்டால் முடங்கிய கட்டுமானப் பணிகள்!

First published: June 15, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading