காற்று மாசு கண்காணிக்க சென்னையில் புதிதாக கருவி... அசத்தும் வடசென்னை மாணவர்கள்!

காற்று மாசு கண்காணிக்க சென்னையில் புதிதாக கருவி... அசத்தும் வடசென்னை மாணவர்கள்!
சந்திரிகா மற்றும் அல்தாப்
  • News18
  • Last Updated: January 28, 2020, 6:14 PM IST
  • Share this:
காற்று மாசு தேசிய அளவில் தலைப்பு செய்தியாக பேசப்படும் நிலையில் அதை குறைப்பதற்கு தங்களால் இயன்ற முயற்சிகளை வடசென்னையை சேர்ந்த மாணவர்கள் எடுத்து வருகின்றனர்.

சமூக பொருளாதாரத்தில் பின் தங்கிய குடும்பங்களை சேர்ந்த மாணவர்களான இவர்கள் தங்கள் ஆர்வத்தின் மூலம் காற்று மாசு பற்றி கற்றுக் கொண்டு அதை கண்காணிக்கும் கருவியையும் தங்கள் பகுதியில் பொருத்தியுள்ளனர்.

கொடுங்கையூர் குப்பை கிடங்கு, சுண்ணாம்பு கால்வாய், கோலமாவு தொழிற்சாலை ஆகியவை இருக்கக் கூடிய கொருக்குப்பேட்டையில் காற்று மாசு கண்காணிப்பு இயந்திரத்தை மாணவர்கள் பொருத்தியுள்ளனர். காற்று மாசுவின் முக்கியமான அளவுகோலான particulate matter எனப்படக்கூடிய PM2.5 அளவு காற்றில் என்னவாக இருக்கிறது என்பதை கண்காணிக்க முடியும்.


" கடந்த பத்து நாட்களாக காற்று மாசுவை கண்காணித்து வருகிறோம். இதற்கு முன் மாசு இல்லை என நினைத்துக் கொண்டிருந்தோம். ஆனால் இந்த இயந்திரத்தின் மூலம் எந்த நேரத்தில் மாசு அதிகமாக உள்ளது, எவ்வளவு நேரம் அதிகமாக உள்ளது என்ற தகவல்களை தெரிந்து கொள்கிறோம்" என்று 11-ம் வகுப்பு மாணவர் அல்தாப் கூறுகிறார்.

ஐ ஐ டி கான்பூரில் முதன் முதலில் வடிவமைக்கப்பட்ட இந்த கருவியை மாணவர்கள் நிறுவுவதற்கு உறுதுணையாக நின்றவர்  சுற்றுச்சூழல் சுகாதார ஆய்வாளர் விஷ்வஜா. காற்று காசு கண்காணிப்பான் எப்படி இயங்கும், அதிலிருந்து தகவல்களை எப்படி எடுக்க வேண்டும் என கற்றுக் கொடுத்துள்ளார்.

"காற்று மாசு என்பது சுற்றுச்சூழல் பிரச்னை மட்டுமல்ல. சுகாதார பிரச்னை. எனவே மாணவர்கள் விழிப்புணர்வு பெறுவது வரவேற்கத்தக்கது. ஒரு நாளில் சராசரி மாசு அளவை மட்டும் எடுத்து கொண்டு அந்த நாள் ஆரோக்கியமான நாளா இல்லையா என தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் கூறுகிறது.ஆனால் கொருக்குப்பேட்டையில் பார்க்கும் போது காலை இரண்டு மணி நேரங்கள் காற்று மாசு மிக மோசமாக உள்ளது. மற்ற நேரங்களில் சரியான அளவில் உள்ளது. எனினும் அந்த இரண்டு மணி நேரங்கள் போதும், நம் உடலில் கோளாறுகள் ஏற்படுத்தும் அப்படியென்றால் அது ஆரோக்கியமான நாள் அல்ல" என்கிறார் விஷ்வஜா.

கூலி தொழிலாளியின் மகளான கல்லூரி மாணவி சந்திரிகா இத்திட்டம் குறித்து ஆர்வத்துடன் பேசுகிறார். "காற்று மாசு குறித்து நடைபெற்ற ஒரு பயிற்சி வகுப்பில் இது குறித்து விழிப்புணர்வு ஏற்பட்டது.

எனவே நாம் வாழும் பகுதியில் காற்று மாசு குறித்து அறிந்து கொள்ள இந்த முயற்சியை எடுத்துள்ளோம். சென்னையின் மிகப்பெரிய குப்பைக் கிடங்கு கொடுங்கையூர் அருகில் உள்ளதால் இங்கு காற்று மாசு எப்படி உள்ளது என கண்காணிக்க விரும்பினோம்.

இந்த கருவியில் உள்ள சென்சாரில் தூசு படும்போது அதில் மாசு எவ்வளவு உள்ளது என கணக்கிடும். இது போன்று அரசு நிறுவியுள்ள கருவிகள் சென்னையில் மூன்று மட்டுமே உள்ளன. அதிக கண்காணிப்பான்கள் பொருத்தி அந்தந்த இடங்களில் மாசு ஏற்பட என்ன காரணம் என கண்டறிந்து அதை தடுக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்கிறார்சந்திரிகா.

Also see...
First published: January 28, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading