மூதாட்டி வீட்டு வாசலில் மருத்துவர் சிறுநீர் கழித்த வீடியோ போலியானது - மறுக்கும் ஏ.பி.வி.பி

மூதாட்டி வீட்டு வாசலில் சிறுநீர் கழித்து தொந்தரவு செய்ததாக ஏபிவிபி தலைவர் சுப்பையா மீது வழக்குப் பதிவு செய்யப்பட்ட நிலையில், அவர் குறித்து பரவிய வீடியோ போலியானது என ஏபிவிபி கூறியுள்ளது.

மூதாட்டி வீட்டு வாசலில் மருத்துவர் சிறுநீர் கழித்த வீடியோ போலியானது - மறுக்கும் ஏ.பி.வி.பி
ஏபிவிபி தேசியத் தலைவர் சுப்பையா சண்முகம்.
  • Share this:
சென்னையில் மூதாட்டி வீட்டு வாசலில் சிறுநீர் கழித்து தொந்தரவு செய்ததாக ஏபிவிபி அமைப்பின் தலைவர் மருத்துவர் சுப்பையா சண்முகம் மீது மூன்று பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

அடுக்குமாடி குடியிருப்பின் கீழ் தளத்தில் வசித்துவரும் மருத்துவர் சுப்பையா, தனது காரை மூதாட்டிக்குச் சொந்தமான பார்க்கிங் இடத்தில் நிற்க வைப்பதில் உடன்பாடு ஏற்படாததால், அவருக்கு சுப்பையா தொடர்ந்து தொந்தரவு செய்துவந்ததாகக் கூறப்படுகிறது.

இதுதொடர்பாக விளக்கம் அளித்துள்ள ஏபிவிபி அமைப்பின் தேசிய பொதுச் செயலாளர் நித்தி திரிபாதி, காங்கிரஸ் கட்சி மற்றும் தேசிய மாணவர் கூட்டமைப்பு இணைந்து சுப்பையான தொடர்பாக போலியான வீடியோ ஒன்றை சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருவதாகவும், அவர்கள் மீது சட்ட ரீதியிலான நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.


Also read: தமிழகத்தில் நான்கு சனிக்கிழமைகளில் மட்டும் 700 கோடிக்கு மது விற்பனை

வாகன நிறுத்துமிடம் தொடர்பாக இரண்டு குடும்பங்களுக்கு இடையே இருந்த பிரச்னை, குடியிருப்பு சங்கத்தினருடன் இணைந்து பேச்சுவார்த்தை நடத்தி சுமூகமாக தீர்க்கப்பட்டுவிட்டதாகவும் ஏபிவிபி தெரிவித்துள்ளது.
First published: July 26, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading