எந்த நேரத்திலும் மனம் தளரக்கூடாது - கொள்ளையர்களை விரட்டியடித்த வீரத்தம்பதி

எந்த நேரத்திலும் மனம் தளரக்கூடாது - கொள்ளையர்களை விரட்டியடித்த வீரத்தம்பதி
சண்முக வேல் | செந்தாமரை
  • News18
  • Last Updated: August 14, 2019, 3:41 PM IST
  • Share this:
மக்கள் எப்போதும் பாதுகாப்பாக இருக்கவேண்டும். எந்த நேரத்திலும் மனம் தளர விடக்கூடாது என்று நெல்லையில் கொள்ளையர்களை விரட்டிய வீரத்தம்பதி பேட்டியளித்துள்ளனர்.

நெல்லையில் முகமூடி கொள்ளையர்களை விரட்டிய வீரத்தம்பதி சண்முகவேல், செந்தாமரை ஆகியோர் நாளை நடைபெறவுள்ள சுதந்திரதின விழாவில் கவுரவிக்கப்பட உள்ளனர். அந்த நிகழ்வில் பங்கேற்க சென்னை விமான நிலையம் வந்தனர்.

தம்பதியின் மூத்த மகன் மற்றும் நெல்லை மாவட்ட தாசில்தார் ஆகியோர் உடன் இருந்தனர்.அப்போது செய்தியாளர்களிடம் பேசிய சண்முக வேல் கூறியதாவது,


“சம்பவம் நடந்து அடுத்த ஐந்து நிமிடத்தில் நாங்கள் காவல்துறைக்கு தெரிவித்தோம், காவல்துறையினர் இருபது நிமிடத்திற்கு அங்கு வந்து விட்டனர்.என் மனைவியின் செயினை கொள்ளையர்கள் பறித்து சென்றுவிட்டனர்.

நாளை நடைபெற உள்ள சுதந்திர தின விழாவில் எங்களை கவுரவிப்பதற்காக முதல்வர் எங்களை அழைத்துள்ளார். அதனால் தான் நாங்கள் சென்னை வந்துளோம்.

மக்கள் எப்போதும் பாதுகாப்பாக இருக்கவேண்டும். எந்த நேரத்திலும் மனம் தளரவிடக்கூடாது இதுதான் நான் மற்றவர்களுக்கு கூறும் அறிவுரை” என்றார்அதனை தொடர்ந்து பேசிய அவர் மனைவி கூறியதாவது, “அந்த நேரத்தில் எனது மனநிலை வேறு எதை பற்றியும் யோசிக்கவில்லை. என் கணவரை எப்படியாவது காப்பாற்றவேண்டும். அது மட்டும்தான் என் மனதில் இருந்தது, அதனால்தான் நான் அந்த கொள்ளையர்களை தாக்கினேன்” என்றார்.

First published: August 14, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்