இலங்கை குண்டு வெடிப்பு: சென்னையில் சிறப்பு புலனாய்வு குழுவினர் விசாரணை

இலங்கை குண்டு வெடிப்பு சம்பவத்தில் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் நபர் ஒருவர் ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையில் பதுங்கியிருப்பதாக தகவல் கிடைத்துள்ளது.

இலங்கை குண்டு வெடிப்பு: சென்னையில் சிறப்பு புலனாய்வு குழுவினர் விசாரணை
இலங்கை குண்டு வெடிப்பு சம்பவத்தில் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் நபர் ஒருவர் ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையில் பதுங்கியிருப்பதாக தகவல் கிடைத்துள்ளது.
  • News18
  • Last Updated: May 1, 2019, 8:04 AM IST
  • Share this:
இலங்கையில் ஈஸ்டர் ஞாயிறு குண்டு வெடிப்பு தொடர்பாக சென்னையில் தமிழக சிறப்பு புலனாய்வு குழுவினர் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். இதேபோன்று ராமநாதபுரத்தில் தேசிய பாதுகாப்பு முகமையினர் விசாரணை மேற்கொண்டனர்.

இலங்கையில் தேவாலயம், நட்சத்திர விடுதிகள் என அடுத்தடுத்து பல இடங்களில் நடத்தப்பட்ட குண்டு வெடிப்பு தொடர்பாக தமிழ் ஆசிரியர் உட்பட 100-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

இந்த குண்டுவெடிப்பு தாக்குதலில் தொடர்புடைய பயங்கரவாத அமைப்புடன் தமிழகம், கேரளாவை சேர்ந்த சிலர் தொடர்பில் இருந்து வருவதாக இந்திய உளவுத் துறைக்கு தகவல் கிடைத்தது.


இதனடிப்படையில் கேரளாவில் காசர்கோடு உள்ளிட்ட இடங்களில் தேசிய புலனாய்வு முகமையினர் அண்மையில் சோதனையில் ஈடுபட்டனர்.

இந்நிலையில், குண்டு வெடிப்பில் தொடர்புடைய முக்கிய நபர்கள் சென்னை மண்ணடியில் பதுங்கியிருப்பதாக தகவல் கிடைத்தது. இதன் அடிப்படையில், அடிப்படைவாத அமைப்புகளை கண்காணித்து வரும் தமிழக சிறப்பு புலனாய்வு குழுவினர் நேற்று காலை அந்த பகுதியில் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது இலங்கையை சேர்ந்த மூன்று நபர்களை பிடித்து விசாரித்தனர். இரவு வரை நடைபெற்ற இந்த விசாரணையில், இலங்கை குண்டுவெடிப்பில் மூளையாக செயல்பட்ட பயங்கரவாதி ஹாசிம், ஏற்கனவே சென்னை வந்து சென்றதாகவும் அவருடன் இவர்கள் மூன்று பேரும் நெருங்கிய தொடர்பில் இருந்தும் தெரியவந்ததாக கூறப்படுகிறது. எனவே, அவர்கள் 3 பேரிடமும் விசாரணையை தீவிரப்படுத்த திட்டமிட்டுள்ளனர்.இதேபோன்று பூந்தமல்லியில் பாரிவாக்கம் பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் சந்தேகத்திற்கிடமான நபர் வந்து சென்றதாக புகார் எழுந்தது. இதனால், அந்த குடியிருப்பில் தமிழக சிறப்பு புலனாய்வு குழுவினர் இரவு 8 மணியளவில் விசாரணை மேற்கொண்டனர்.

இதேபோன்று இலங்கை குண்டு வெடிப்பு சம்பவத்தில் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் நபர் ஒருவர் ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையில் பதுங்கியிருப்பதாக கிடைத்த தகவலின் அடிப்படையில், அந்த நபரை தேடி தேசிய புலனாய்வு அமைப்பினர் நேற்று மாலை அங்கு சோதனை மேற்கொண்டனர்.

2 மணி நேரத்திற்கும் மேலாக நடைபெற்ற இந்த விசாரணையில், குறிப்பிட்ட நபர் கேரள மாநிலம் கொச்சி சென்றிருப்பதாக தெரியவந்ததால், அந்த நபரை தேடி கொச்சி செல்லவும் அதிகாரிகள் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

Also see... ஒடிசாவை நோக்கிச் செல்லும் ஃபோனி புயல் அதிதீவிர புயலாக வலுப்பெற்றுள்ளது


Also see... 
தேர்தல் செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க. அரசியல் செய்திகள், தேர்தல் பிரசார வீடியோக்கள், சுவாரஸ்யமான வீடியோக்கள், விவாதங்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.First published: May 1, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்