Home /News /tamil-nadu /

பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை புகார்செய்ய ப்ரத்யேக மொபைல் எண் - காவல்துறை அறிவிப்பு..

பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை புகார்செய்ய ப்ரத்யேக மொபைல் எண் - காவல்துறை அறிவிப்பு..

violence

violence

91502-50665 என்னும் சிறப்பு செல்போன் எண் காவல்துறை சார்பில் வெளியிடப்பட்டுள்ளது.

    பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் தொடர்பாக புகார் தெரிவிக்க 91502-50665 என்னும் சிறப்பு செல்போன் எண் காவல்துறை சார்பில் வெளியிடப்பட்டுள்ளது.

    பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றச்செயல்களை தடுக்கும் வகையில் காவல் துணை ஆணையர் ஜெயலட்சுமி தலைமையில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றத் தடுப்பு பிரிவு, சென்னையில் உள்ள 35 அனைத்து மகளிர் காவல் நிலைய போலீஸாரும் இந்தப் புகார்களுக்கு செயல்பட இருப்பதாக தெரிவித்துள்ளது.

    அம்மா ரோந்து வாகனம் மூலம் ரோந்து பணியையும் மேற்கொள்கின்றனர். உடனடியாக குறைகளை களையவும் தற்போது புதிதாக 91502-50665 என்ற செல்போன் எண் வெளியிடப்பட்டு செயல்பாட்டுக்கு வந்துள்ளது.

    சென்னை காவல் எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு தொடர்பான பிரச்னைகளுக்கு இந்த எண்ணில் தொடர்புகொண்டு புகார் அளிக்கலாம் என துணை ஆணையர் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
    Published by:Gunavathy
    First published:

    Tags: Children, Domestic, Physical violence, Violence against women

    அடுத்த செய்தி