சவுகார்பேட்டை கொலைச் சம்பவம்: ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரைச் சேர்ந்த ஓய்வுபெற்ற ராணுவ அதிகாரி ராஜுவ் துபே கைது..
சவுகார்பேட்டை கொலைச் சம்பவம்: ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரைச் சேர்ந்த ஓய்வுபெற்ற ராணுவ அதிகாரி ராஜுவ் துபே கைது..
சென்னை சவுகார்பேட்டையில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் சுட்டுக் கொல்லப்பட்ட வழக்கில் ஜெய்ப்பூரைச் சேர்ந்த முன்னாள் ராணுவ அதிகாரி ராஜூவ் துபே கைது செய்யப்பட்டுள்ளார்.
தனது தங்கை ஜெயமாலாவிற்கு அவரது கணவனின் தந்தை தலீல் சந்த் மற்றும் உறவினர்கள் பாலியல் தொல்லை கொடுத்ததாக தெரிவித்துள்ளார். அதனை கணவர் சீத்தல்குமார் கண்டும் காணாமல் இருந்ததால் அவரது குடும்பத்தையே திட்டமிட்டு தீர்த்து கட்டியதாக வாக்குமூலம் அளித்துள்ளார். கொலை செய்வதற்கு நாட்டு துப்பாக்கி ஒன்றும், முன்னாள் விமானப்படை அதிகாரி துப்பாக்கி ஒன்றையும் பயன்படுத்தியதாகவும் கூறியுள்ளார்.
தனது சகோதரர் விலாஸ் ஒரு வழக்கறிஞர் என்பதால் முன்னாள் விமானப்படை அதிகாரி ஒருவருடன் பழக்கம் இருந்ததாக தெரிவித்துள்ளார். அதனால் அந்த விமானப்படை அதிகாரியின் லைசென்ஸ் துப்பாக்கியை கொலைக்கு பயன்படுத்தியதாக கூறியுள்ளார். ஓய்வு பெற்ற விமானப்படை வீரரின் காரையும் கொலை சம்பவத்திற்கு பயன்படுத்தியதாகவும் விசாரணையில் தெரிய வந்துள்ளது.
இந்த வழக்கில் ஏற்கனவே கைது செய்யப்பட்ட கைலாஷ், ரவீந்திரநாத், உத்தம் கமல் ஆகியோரை 10 நாள் காவலில் எடுத்து போலீசார் விசாரித்து வருகின்றனர். மூன்று பேரை கொலை செய்வதற்கு முன்னாள் ராணுவ அதிகாரியின் துப்பாக்கியை பயன்படுத்தியதாக அவர்கள் போலீசில் வாக்குமூலம் அளித்திருந்தனர். அவருடைய காரையும் கொலைக்கு பயன்படுத்தியதாக தெரிவித்திருந்தனர்.
அதனடிப்படையில் ஜெய்ப்பூரிலிருந்து முன்னாள் ராணுவ அதிகாரி ராஜீவ் துபே மற்றும் அவருடைய மனைவியை சென்னைக்கு அழைத்து வந்து போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். விசாரணையில், கொலை சதி குறித்து தெரிந்தே, துப்பாக்கியை கொடுத்து அனுப்பியது உறுதிப்படுத்தப்பட்டதால், ராஜீவ் துபேவை போலீசார் கைது செய்தனர்.
Published by:Vaijayanthi S
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.