மின்சார ரயில் பயணிகள் கவனத்திற்கு...! இந்த நாட்களில் ரயில்கள் இயங்காது

Chennai EMU Trains Cancelled | ஆடி கிருத்திகையை முன்னிட்டு பயணிகள் வசதிக்காக சென்னை சென்ட்ரலில் இருந்து திருத்தணிக்கு வரும் 24-ம் தேதி முதல் 28-ம் தேதி வரை சிறப்பு மின்சார ரயில்கள் இயக்கப்படுகின்றன.

மின்சார ரயில் பயணிகள் கவனத்திற்கு...! இந்த நாட்களில் ரயில்கள் இயங்காது
கோப்புப்படம்
  • News18
  • Last Updated: July 21, 2019, 9:06 AM IST
  • Share this:
பராமரிப்பு பணிகள் காரணமாக சென்னை மின்சார ரயில் சேவை அடுத்த 6 ஞாயிற்றுக்கிழமைகளில் ரத்து செய்யப்பட்டுள்ளது.

சென்னை எழும்பூர் - தாம்பரம் இடையே தண்டவாளப் பராமரிப்பு பணி இன்று (ஞாயிறு) முதல் அடுத்தடுத்த 6 ஞாயிற்றுக்கிழமைகளில் நடக்கவுள்ளதால் அன்றைய தினங்களில் இந்த தடத்தில் 29 மின்சார ரயில்களின் சேவைகள் ரத்து செய்யப்படுகின்றன.

இதுதொடர்பாக தெற்கு ரயில்வே நேற்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு கீழ்வருமாறு:-


சென்னை கடற்கரை - தாம்பரம்:-

சென்னை எழும்பூர் - தாம்பரம் இடையே, வரும் ஜுலை 21, 28 மற்றும் ஆகஸ்ட் 4, 11, 18, 25-ம் தேதிகளில் (ஞாயிறுக்கிழமைகளில்) தண்டவாளப் பராமரிப்பு பணிகள் நடைபெறவுள்ளன. இதனால், சென்னை கடற்கரையில் இருந்து தாம்பரத்துக்கு காலை 10.30, 10.40, 10.50, 11.10, 11.20, 11.30, 11.40, மதியம் 12.00, 12.10, 12.20, 12.40, 1.15, 1.30, 2.00, 2.30 ஆகிய நேரங்களில் புறப்படும் மின்சார ரயில்களின் சேவைகள் ரத்து செய்யப்படுகின்றன.

இதேபோல், தாம்பரத்தில் இருந்து சென்னை கடற்கரைக்கு செல்லும் காலை 10.45, 10.55, 11.15, 11.25, 11.35, மதியம் 12.00, 12.15, 12.45, 1.30, 1.45, 2.15, 2.30, மாலை 3.00, 3.10 ஆகிய நேரங்களில் புறப்படும் மின்சார ரயில்களின் சேவைகளும் ரத்து செய்யப்படுகின்றன.சென்னை கடற்கரை - செங்கல்பட்டு:-

சென்னை கடற்கரை - செங்கல்பட்டுக்கு காலை 11, 11.50, மதியம் 12.30, 1, 1.45, 2.15, 2.45 மற்றும் அரக்கோணத்துக்கு மதியம் 12.50 மணிக்கு இயக்கப்படும் ரயில்கள் ஒரு பகுதி ரத்து செய்யப்பட்டு தாம்பரத்தில் இருந்து இயக்கப்படும். காஞ்சிபுரம் - சென்னை கடற்கரை காலை 9.15, செங்கல் பட்டு - கடற்கரை காலை 10.55, காலை 11.30, மதியம் 12.20, 1, 1.50, திருமால்பூர் - கடற்கரைக்கு காலை 10.40 மணி ரயில்கள் ஒரு பகுதி ரத்து செய்யப்பட்டு தாம்பரம் வரை மட்டுமே இயக்கப்படும்.

பயணிகள் சிறப்பு ரயில்:

இதற்கிடையே, பயணிகள் வசதிக்காக சென்னை கடற்கரை - தாம்பரம் இடையே இருமார்க்கத்திலும் பயணிகள் 8 ரயில்கள், சிறப்பு ரயில்களாக இயக்கப்படஉள்ளன. 30 நிமி டங்கள் முதல் 45 நிமிடங்கள் இடைவெளியில் இந்த சிறப்பு ரயில்கள் இயக்கப்படும்.

திருத்தணிக்கு சிறப்பு ரயில்:

ஆடி கிருத்திகையை முன்னிட்டு பயணிகள் வசதிக்காக சென்னை சென்ட்ரலில் இருந்து திருத்தணிக்கு வரும் 24-ம் தேதி முதல் 28-ம் தேதி வரை சிறப்பு மின்சார ரயில்கள் இயக்கப்படுகின்றன.

சென்ட்ரலில் இருந்து காலை 8.20, 11.05 மதியம் 12.50 மணிக்கு புறப்படும் அரக்கோணம் மின்சார ரயில்கள் திருத்தணி வரையில் நீட்டிப்பு செய்து சிறப்பு ரயில்களாக இயக்கப் படும். திருத்தணியில் இருந்து காலை 11.30, மதியம் 1.30, மாலை 3.20 மணிக்கு புறப்பட்டு சென்ட்ரலுக்கு சிறப்பு ரயில் களாக இயக்கப்படும்.

First published: July 20, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்