பப்ஜி விளையாட்டில் மூழ்கியிருந்ததை, தாய் கண்டித்ததால் மாணவன் தற்கொலை.. நடந்தது என்ன?

மத்திய அரசால் தடை செய்யப்பட்ட பப்ஜி விளையாட்டில்  மூழ்கிய மகனைத் தாய் கண்டித்ததால், 17 வயது ஐடிஐ மாணவன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். பப்ஜி அடிமைத்தனம் முடிவுக்கு வருமா?

  • Share this:
ஊரடங்கின்போது இளைஞர்கள் பலர் உணவை மறந்து, ஆன்லைன் விளையாட்டே கதி என கிடக்கிறார்கள். அப்படிப்பட்டவர்களை கட்டிப்போட்டுள்ள முக்கிய கேம் பப்ஜி.. சுடு.. கொல்லு.. வெட்டு.. என நொடிக்கு நொடி வெறியேற்றும் பப்ஜி விளையாட்டில் மூழ்கிவிட்டால் உலகம் மறந்துவிடும்.. ஆனால், அந்த கேம் உலகத்திற்குள் இருந்து போக தொல்லை கொடுத்தால் இளைஞர்களும் சிறுவர்களும் தற்கொலை செய்துகொள்வதுதான் அதிர்ச்சி.. 17 வயதே ஆன டேனியல் ஜோசப் பப்ஜிக்காக தனது உயிரை மாய்த்துக்கொண்டுள்ளார்.

ஆவடி அடுத்த கொள்ளுமேடு சிவசக்தி நகரைச் சேர்ந்தவர் 17 வயதான டேனியல் ஜோசப். ஐடிஐ படித்து வந்தார் . பப்ஜி விளையாட்டு தடை செய்யப்படுவதற்கு முன்பே டேனியல் ஜோசப் அந்த விளையாட்டிற்கு அடிமையாகியிருந்தார். பப்ஜி விளையாட்டை மத்திய அரசு தடை செய்த நிலையிலும் ஏற்கனவே அதைத் தரவிறக்கம் செய்திருந்தால் அந்த செயலி செயல்படும். அந்த வகையில் தடைக்குப் பின்னரும் டேனியல் பப்ஜியில் மூழ்கியிருந்தார்.

இதுகுறித்துப் பலமுறை பெற்றோர் கண்டித்தும் அவரால் பப்ஜி விளையாட்டில் இருந்து வெளியில் வர முடியவில்லை. கொரோனா ஊரடங்கால் பள்ளிகள், கல்லுாரிகள் மூடப்பட்ட நிலையில் வீட்டில் முடங்கிக் கிடந்த டேனியல் பப்ஜி விளையாட்டில் மேலும் அதிக ஆர்வம் காட்டி விளையாடி வந்தார். அதைக் கவனித்துக் கவலையடைந்த தாய் பவுலின் ஜேக், மகனை அடிக்கடி கண்டித்து வந்தார். ஆனாலும் டேனியல் கேட்கவில்லை.


இந்த நிலையில் செவ்வாய் இரவு டேனியல் தனது செல்போனில் நீண்ட நேரம் பப்ஜியில் மூழ்கியிருந்ததாகக் கூறப்படுகிறது. அதைப்பார்த்த தாய் மகனைக் கண்டித்து செல்போனைப் பறித்துக் கொண்டு கடைக்கு சென்றுள்ளார். விரக்தி அடைந்த டேனியல், படுக்கை அறைக்குச் சென்று மின்விசிறியில் தூக்கிட்டு  தற்கொலை செய்து கொண்டார்.

மேலும் படிக்க.. விஜய் சேதுபதி மகளுக்கு பாலியல் மிரட்டல்விடுத்தவர் இலங்கையில் உள்ளார் - கைது செய்ய காவல்துறை தீவிர நடவடிக்கைசிறிது நேரம் கழித்து வீடு திரும்பிய அவரது தாய் மகன் தற்கொலை செய்து கொண்டதைப் பார்த்து கதறி அழுதார். தகவல் அறிந்து ஆவடி டேங்க் பேக்டரி போலீசார் சிறுவன் சடலத்தை மீட்டு வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.பப்ஜி போன்ற ஆன்லைன் விளையாட்டுகளில் இருந்து குழந்தைகள், சிறார்களை மீட்க பெற்றோர் தான் அதிக முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும் என்கி்ன்றனர் மனநல மருத்துவர்கள். பப்ஜிக்கு அடிமையான மாணவன், அதில் இருந்து வெளியே வருவது எப்படி எனத் தெரியாமல் தனது வாழ்வை முடித்துக் கொண்ட சம்பவம் கொள்ளுமேட்டில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

-----------------------------------------------------------------------------------------------

மன அழுத்தம் ஏற்பட்டாலோ, தற்கொலை எண்ணம் உண்டானாலோ, அதனை மாற்ற, கீழ்காணும் எண்களுக்கு அழைக்கவும்.மாநில உதவிமையம்: 104

சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் - 044 -24640050

First published: October 22, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading