செல்லூர் ராஜுவை தன் பக்கம் இழுக்க முயற்சித்த திமுக எம்.எல்.ஏ...! சட்டமன்றத்தில் நடந்த சுவாரஸ்ய நிகழ்வு

கூட்டுறவு துறை அமைச்சர் செல்லூர் ராஜு சட்டமன்றம் வந்த போது, திமுக சட்டமன்ற உறுப்பினர் ரங்கநாதன், அவரது கையை பிடித்து இழுத்து நீங்களும் எங்கள் பக்கம் வந்துவிடுங்கள் என இழுத்தார்.

செல்லூர் ராஜுவை தன் பக்கம் இழுக்க முயற்சித்த திமுக எம்.எல்.ஏ...! சட்டமன்றத்தில் நடந்த சுவாரஸ்ய நிகழ்வு
செல்லூர் ராஜு
  • News18
  • Last Updated: June 28, 2019, 3:37 PM IST
  • Share this:
சட்டப்பேரவைக் கூட்டத்திற்கு செல்லும்போது திமுக உறுப்பினர்களை பார்த்து என்ன மறியல் செய்கிறீர்களா என்று  துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கிண்டலாக கேட்க, அதற்கு திமுக உறுப்பினர்கள் ”நீங்கள் சொன்னால் பண்ணுகிறோம்” என பதில் அளித்துள்ளனர்.

நாடாளுமன்ற தேர்தலுக்கு பிறகு, முதல்முறையாக தமிழக சட்டப்பேரவை இன்று கூடியது. அப்போது கூட்டத்தில் கலந்துக்கொள்ள துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வந்தார். அதே சமயத்தில் எதிர்கட்சி தலைவர் ஸ்டாலினை வரவேற்க திமுக உறுப்பினர்களும் கூட்டமாக காத்திருந்தனர்.

அவர்களை பார்த்து, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் என்ன மறியல் செய்கிறீர்களா என சிரித்துக்கொண்டே கேட்டார். அதற்கு திமுக உறுப்பினர்கள் நீங்கள் சொன்னால் பண்ணுகிறோம் என பதில் அளித்தனர். அதற்கு துணை முதல்வர் சிரித்துக்கொண்டே வணக்கம் தெரிவித்தவாறு சென்றுவிட்டார்.


அதே போல் கூட்டுறவு துறை அமைச்சர் செல்லூர் ராஜு வந்த போது, திமுக சட்டமன்ற உறுப்பினர் ரங்கநாதன், அவரது கையை பிடித்து இழுத்து நீங்களும் எங்கள் பக்கம் வந்துவிடுங்கள் என இழுத்தார். உடனடியாக சுதாரித்து சிரித்துக்கொண்டே செல்லூர் ராஜு அங்கிருந்து சென்றுவிட்டார்.

மேலும் படிக்க...  தளபதிகளை இழந்த தினகரன்!அரசியல், சினிமா, வைரல், செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க. சுவாரஸ்யமான வீடியோக்கள், விவாதங்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.First published: June 28, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்