சென்னை ஐஐடி மற்றும் தமிழ்நாடு சிறு குறு தொழில் கூட்டமைப்பு இணைந்து கொரோனா தாக்கத்தால் சிறு குறு தொழில் நிறுவனங்கள் அடைந்துள்ள பாதிப்புகள் குறித்து 1200 நிறுவனங்களிடம் ஆய்வு நடத்தப்பட்டது.
இதில் 31.3 சதவீதம் சிறு குறு தொழில் நிறுவனங்கள் தனி நபர்கள் அல்லது தனியார் நிறுவனங்களிடம் கடன் வாங்கக்கூடிய நிலையில் இருப்பது தெரிய வந்துள்ளது.
கடன் வழங்குவதற்கு வங்கிகள் விதிக்கும் கடுமையான நிபந்தனைகள், கேட்கும் ஆவணங்கள், அதிக வட்டி உள்ளிட்ட காரணங்களால் வங்கிகளை சிறுகுறு தொழில் நிறுவனங்கள் தவிர்ப்பதற்கான காரணமாக தெரிய வந்துள்ளது.
கொரோனாவிற்கு முன்னர் தனி நபர்கள் அல்லது தனியார் நிறுவனங்களிடம் கடன் பெறுவது 21% சதவிகிதமாக இருந்தது, 31.3% சதவிகிதம் உயர்ந்துள்ளது என்கிறது ஆய்வு.
மேலும், கொரோனா தாக்கம் 75 சதவிகித தொழில் வாய்ப்புகளை பறித்துள்ளதாகவும், வரும் நாட்களில் 55 சதவீத நிறுவனங்கள் தொழிலாளர்களை வேலையை விட்டு நீக்குவார்கள் என்றும், 18.3 சதவீதம் நிறுவனங்கள் ஏற்கனவே ஆட்குறைப்பு செய்துள்ளதாகவும் 50 சதவீத நிறுவனங்கள் ஆட்குறைப்பு நடவடிக்கையில் ஈடுபட வாய்ப்பு அதிகம் என்பதும் ஆய்வில் தெரியவந்துள்ளது.
இந்த நிலையில் மாநில அரசு சிறு குறு தொழில் நிறுவனங்களுக்கு அரசாங்கம் மூலம் கடன் வழங்க தனி நிதி அமைப்பை உருவாக்கினால் சிறு குறு தொழில் நிறுவனங்கள் சந்தித்துள்ள பாதிப்புகளிலிருந்து மீளக் கூடும் என்பதும் ஆய்வின் முடிவாகும்.
Published by:Vinothini Aandisamy
First published:
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம். நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.