வீடுகளை காலி செய்யாவிட்டால் இடிப்போம்... அதிகாரிகளின் மிரட்டலால் அச்சத்தில் குடிசைவாழ் மக்கள்

சென்னை நுங்கம்பாக்கம் பகுதியில் வசிக்கும் குடிசைவாழ் மக்கள் 2 நாட்களில் காலி செய்யாவிட்டால் வீடுகளை இடித்துவிடுவோம் என அதிகாரிகள் மிரட்டுவதால், என்ன செய்வதென தெரியாமல் தவித்துவருகின்றனர்.

  • Share this:
சென்னை நுங்கம்பாக்கம் தர்மாபுரம் பகுதியில் 70-க்கும் மேற்பட்ட குடிசை வீடுகள் உள்ளன.

இங்கு வசிப்பவர்கள் அனைவரும் கூலித் தொழிலாளர்கள். இந்நிலையில், தர்மாபுரம் பகுதியில் குடிசை வீடுகளை காலி செய்துவிட்டு, எழில் நகரில் ஒதுக்கப்பட்டுள்ள வீடுகளுக்கு செல்ல குடிசை மாற்று வாரியம் உத்தரவிட்டுள்ளது. ஆனால், வேலைவாய்ப்பு மற்றும் குழந்தைகளின் கல்வி போன்ற சிக்கல் காரணமாக இங்கேயே வசிக்க அனுமதி அளிக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.

மேலும் எழில் நகரில் ஒதுக்கப்படும் வீடுகளுக்கு 20 ஆயிரம் ரூபாய் பணம் கட்ட வேண்டும் என அதிகாரிகள் கூறுவதாகவும், தற்போதைய சூழலில், அந்த பணத்தை எவ்வாறு செலுத்த முடியும் என்றும் கேள்வி எழுப்புகின்றனர்.வேலையே இல்லாமல் வருமானம் இன்றி தவிக்கும் நிலையில், வீட்டை காலி செய்யச் சொல்வதாகவும், எழில் நகரில் தங்களது பிள்ளைகளுக்கு பாதுகாப்பு இல்லை என்றும் கூறுகின்றனர்.

1996-ம் ஆண்டே தங்களுக்கு பட்டா வழங்கப்படும் என அறிவித்தும், இதுவரை பட்டா வழங்கப்படவில்லை எனக் கூறும் குடிசைவாசிகள், வருமானமே இல்லாத நேரத்தில் புதிய இடத்திற்கு செல்ல தங்களை நிர்பந்திப்பதாகவும், 2 நாட்களில் வீட்டை காலி செய்யாவிட்டால், குடிசைகளை இடித்துவிடுவோம் என மிரட்டுவதாகவும் வேதனை தெரிவிக்கின்றனர்.
First published: August 11, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading