சகோதரிக்கு மாமனார் பாலியல் தொல்லை கொடுத்ததால் கொலை: சவுகார்பேட்டை துப்பாக்கிச்சூடு சம்பவத்தின் பகீர் பின்னணி

தனது சகோதரிக்கு கணவரின் தந்தையும், உறவினர்களும் பாலியல் தொல்லை கொடுத்ததால் அவர்களை சுட்டுக் கொன்றதாக சவுக்கார்பேட்டை கொலை வழக்கில் கைதான கைலாஷ், வாக்குமூலம் அளித்துள்ளார்.

  • Share this:


சென்னை சவுகார்பேட்டையில் கடந்த 11ஆம் தேதி ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். இந்த வழக்கில் கைலாஷ், ரபீந்திரநாத் கர் மற்றும் விஜய் உத்தம் ஆகியோரை போலீசார் 10 நாள் காவலில் எடுத்துள்ளனர். விடிய, விடிய நடத்தப்பட்ட விசாரணையில் ஜெயமாலாவின் அண்ணன் கைலாஷ் திடுக்கிடும் வாக்குமூலம் அளித்துள்ளார்.

தனது தங்கை ஜெயமாலாவிற்கு அவரது கணவனின் தந்தை தலீல் சந்த் மற்றும் உறவினர்கள் பாலியல் தொல்லை கொடுத்ததாக தெரிவித்துள்ளார். அதனை கணவர் சீத்தல்குமார் கண்டும் காணாமல் இருந்ததால் அவரது குடும்பத்தையே திட்டமிட்டு தீர்த்து கட்டியதாக வாக்குமூலம் அளித்துள்ளார். கொலை செய்வதற்கு நாட்டு துப்பாக்கி ஒன்றும், முன்னாள் விமானப்படை அதிகாரி துப்பாக்கி ஒன்றையும் பயன்படுத்தியதாகவும் கூறியுள்ளார்.


தனது சகோதரர் விலாஸ் ஒரு வழக்கறிஞர் என்பதால் முன்னாள் விமானப்படை அதிகாரி ஒருவருடன் பழக்கம் இருந்ததாக தெரிவித்துள்ளார். அதனால் அந்த விமானப்படை அதிகாரியின் லைசென்ஸ் துப்பாக்கியை கொலைக்கு பயன்படுத்தியதாக கூறியுள்ளார்.

மேலும் படிக்க...ஜம்மு - காஷ்மீரில் 4 பயங்கரவாதிகள் என்கவுண்டரில் சுட்டுக்கொலைஓய்வு பெற்ற விமானப்படை வீரரின் காரையும் கொலை சம்பவத்திற்கு பயன்படுத்தியதாகவும் விசாரணையில் தெரிய வந்துள்ளது.முன்னாள் விமானப்படை அதிகாரியின் விவரங்களை திரட்டும் பணியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.
First published: November 19, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading