சென்னை : சிறுமியை மிரட்டி பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய சகோதரி மற்றும் சகோதரியின் கணவர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது..

மாதிரி படம்

சிறுமியை மிரட்டி பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய சகோதரி மற்றும் சகோதரியின் கணவர் குடும்பத்தை தண்டையார்பேட்டை அனைத்து மகளிர் காவல்துறையினர் போக்சோ சட்டத்யின் கீழ் கைது செய்துள்ளனர்.

 • Share this:
  சென்னை வியாசர்பாடியை சேர்ந்த சாஹிதா பானு கணவனை பிரிந்து வாழ்கிறார். இவரை தண்டையார்பேட்டையை சேர்ந்த மதன் என்பவர் திருமணம் செய்து கொள்வதாக அழைத்து சென்றுள்ளார். இந்நிலையில் சாஹிதா பானுவுக்கு உடல் நிலை சரியில்லை என அவரது 15 வயது சகோதரியை வீட்டிற்கு அழைத்துள்ளார். 2 மாதமாகியும் சகோதரி வீட்டுக்கு சென்ற மகள் திரும்பி வராததால், மதனிடம் திருப்பி அனுப்புமாறு அவர் தாய் கேட்டுள்ளார். இந்நிலையில் 2 மாதம் கழித்து வீட்டுக்கு வந்த மகளை தாய் விசாரணை செய்ததுள்ளார். அப்போது, சாஹிதா பானு, மதன் மற்றும் அவரது குடும்பதினர் 15 வயது சகோதரியை மிரட்டி பாலியல் தொழில் ஈடுபடுத்தியது தெரியவந்துள்ளது.

  மேலும் சாஹிதா பானுவும் கணவருடன் சேர்ந்து  பாலியல் தொழில் செய்வதை கேட்டு, தாய் அதிர்ச்சி அடைந்துள்ளார். இது தொடர்பாக  தண்டையார்பேட்டை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அதனடிப்படையில் புகார் உண்மையானதால், சகோதரி சாஹிதா பானு மற்றும் கணவன் மதன், மதனின் குடும்பத்தினர் மற்றும் கூட்டாளிகள் என 10 பேர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

  இதில் போலிசார் மதன், மதன் குடும்பத்தினர், கூட்டாளிகள் மற்றும் சாஹிதா  பானு என 7 பேரை கைது செய்துள்ளனர். இது போன்று பல பெண்களை மதன் மிரட்டி பாலியல் தொழிலில் ஈடுபடுத்தியது தெரியவந்துள்ளது. மதனின் தங்கை சந்தியா, சிக்கிய பெண்களுக்கு பாலியல் தொழில் செய்யுமாறு  மிரட்டி பயிற்சி கொடுத்ததும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

  மேலும் படிக்க...சென்னையில் வடமாநில குடும்பத்தைச் சேர்ந்த மூவர் சுட்டுக்கொலை.. 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை..  குறிப்பாக மதனின் கூட்டாளியான விஜயா என்பவரின் மகன், ரவுடி பொக்கை ரவியை கொலை செய்த வழக்கில் குற்றவாளி. மதன் இது போன்று ரவுடிகளை வைத்து தன் அம்மாவையும், மற்ற சகோதரிகளையும் கொலை செய்துவிடுவோம் என மிரட்டியதாக பாதிக்கப்பட்ட சிறுமி வாக்குமூலம் அளித்துள்ளார்.

  மேலும் இந்த விவகாரத்தில் தலைமறைவாக உள்ள மற்றவர்களையும் போலீசார் தேடி வருகின்றனர். இது போல் எத்தனை சிறுமிகள்,பெண்கள் பாதிக்கபட்டுள்ளார்கள் என போலிசார் விசாரணை செய்து வருகின்றனர்.
  Published by:Vaijayanthi S
  First published: