ஆதாரத்துடன் புகார் அனுப்பிய குடிமகன்... ஹெல்மெட் அணியாமல் பைக்கில் சென்ற எஸ்.ஐ பணியிடை நீக்கம்

GCTP எனப்படும் செயலியை பயன்படுத்தி உதவி ஆய்வாளர் மதன்குமார் ஹெல்மெட் அணியாததை புகைப்படம் எடுத்து போக்குவரத்து காவல்துறைக்கு பொதுமக்களில் ஒருவர் புகார் அளித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Web Desk | news18
Updated: July 26, 2019, 2:17 PM IST
ஆதாரத்துடன் புகார் அனுப்பிய குடிமகன்... ஹெல்மெட் அணியாமல் பைக்கில் சென்ற எஸ்.ஐ பணியிடை நீக்கம்
ஹெல்மெட் அணியாமல் சென்ற எஸ் ஐ
Web Desk | news18
Updated: July 26, 2019, 2:17 PM IST
ஹெல்மெட் அணியாமல் வாகனம் ஓட்டியதற்காக, காவல் துணை ஆய்வாளர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.

உயர் நீதிமன்ற உத்தரவை அடுத்து சென்னை முழுவதும் ஹெல்மெட் அணியாதவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு வருகிறது. தற்போது பின்னால் அமர்ந்து இருப்பவர்களும் ஹெல்மெட் கட்டாயம் அணிய வேண்டும் என்றும் போலீசார் வலியுறுத்தி வருகின்றனர்.

இந்நிலையில் காவல்துறையினரே ஹெல்மெட் அணியாமல் செல்வதாக நீதிமன்றம் கண்டனம் தெரிவித்தது. அதனை அடுத்து தமிழக டிஜிபி திரிபாதி சுற்றறிக்கை ஒன்றை அனுப்பினார். அதில் அனைத்து காவலர்களும் போக்குவரத்து விதிகளை பின்பற்ற வேண்டும் எனவும் ஹெல்மெட் கட்டாயம் அணிய வேண்டும் எனவும் உத்தரவு பிறப்பித்திருந்தார்.


இதை கடைப்பிடிக்கவில்லை என்றால் கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் எச்சரிக்கை விடுத்திருந்தார். அந்த அடிப்படையில் ஹெல்மெட் அணியாமல் இருசக்கர வாகனம் ஓட்டிய மேற்கு மாம்பலம் காவல் நிலையத்தை சேர்ந்த சட்ட ஒழுங்கு உதவி ஆய்வாளர் மதன்குமாரை இணை ஆணையர் மகேஸ்வரி பணியிடை நீக்கம் செய்து உத்தரவு பிறப்பித்துள்ளார்.

GCTP எனப்படும் போக்குவரத்து காவல்துறை அறிமுகப்படுத்திய செயலியை பயன்படுத்தி உதவி ஆய்வாளர் மதன்குமார் ஹெல்மெட் அணியாததை புகைப்படம் எடுத்து போக்குவரத்து காவல்துறைக்கு பொதுமக்களில் ஒருவர் புகார் அளித்துள்ளனர்.

உடனே சம்பந்தப்பட்ட காவல்துறை உயர் அதிகாரிக்கு அனுப்பி வைத்துள்ளனர். இதனையடுத்து அதிரடியாக அவரை சஸ்பெண்ட் செய்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

Loading...

மேலும் படிக்க... பாகுபலி படத்தின் கதை காப்பியா?

அரசியல், சினிமா, வைரல், செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க. சுவாரஸ்யமான வீடியோக்கள், விவாதங்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.First published: July 26, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...