சென்னையில் மதுபோதையில் சாலையில் நடனமாடிய நபர்களை தட்டிக்கேட்க சென்ற காவல்துறையினர் மீது தாக்குதல் நடத்திய காவல் உதவி ஆய்வாளரின் மகனை போலீசார் கைது செய்தனர்.
சேத்துப்பட்டு பூந்தமல்லி நெடுஞ்சாலைப் பகுதியில் அமைந்துள்ள செயிண்ட் ஜார்ஜ் பள்ளி அருகே சேத்துப்பட்டு போக்குவரத்து போலீசார் நேற்று மதியம் வாகன தணிக்கையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது இருசக்கர வாகனத்தில் வந்த
இளைஞர் ஒருவர் அளவுக்கு அதிகமாக மது போதையில் இருசக்கர வாகனத்தை ஓட்டி வந்தது தெரியவந்தது. சோதனையில் மதுபோதையின் அளவு 241 சதவீதம் அளவு இருந்ததால் போக்குவரத்து போலீசார் அந்த நபரின் மீது டி.டி வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
இதனால் ஆத்திரம் அடைந்த அந்த நபர் ஆபாசமாக பேசி கொண்டு அருகில் இருந்த பெட்ரோல் நிலையத்தில் பெட்ரோல் வாங்கி வந்து காவலர்கள் முன்னிலையில் தற்கொலை செய்து கொள்ள போவதாக கூறி பெட்ரோலை உடம்பு முழுவதும் ஊற்றி உள்ளார்.
உடனடியாக தண்ணீரை ஊற்றி அந்த இளைஞரை பத்திரமாக மீட்டு டிபி சத்திரம் காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் அந்த இளைஞர் பெயர் சபி(27) என்பதும் அவர் அமைந்தகரை திருவீதி அம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் என்பதும் தெரியவந்தது.

சபி
இதனையடுத்து போக்குவரத்து காவலர்களிடம் ஆபாசமாக பேசி பிரச்சனையில் ஈடுபட்ட சபி மீது டிபி சத்திரம் போலீசார் அரசு அதிகாரிகளை பணி செய்யவிடாமல் தடுத்தல், ஆபாசமாக பேசுதல், கொலை மிரட்டல் விடுத்தல், மோட்டார் வாகன சட்டம் உள்ளிட்ட 5 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்தனர்.
இதையும் படிங்க: ஆண்டிப்பட்டி நர்சுடன் உல்லாசம்... கொலை... நகையுடன் எஸ்கேப்.. சிக்கிய கள்ளக்காதலன் தற்கொலை
அதே போல நேற்றிரவு கீழ்ப்பாக்கம் கெங்கு சாலையில் ஒலிபெருக்கியில் பாட்டுப் போட்டு கொண்டு மது போதையில் நடனம் ஆடுவதாக காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் வந்தது.
இதனையடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற போலீசாரை பார்த்ததும் அங்கே ஆட்டம் போட்டுக் கொண்டிருந்த நான்கு நபர்களில் மூன்று நபர்கள் தப்பி ஓடினர். ஒரு நபர் மட்டும் காவலரை பார்த்து மதுபோதையில் அநாகரிகமாக பேசியதுடன் காவலரை கன்னத்தில் அறைந்து சட்டையைக் கிழித்து உள்ளார்.
மதுபோதையில் இருந்த அந்த நபரை கீழ்பாக்கம் காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டபோது எழும்பூர் காவலர் குடியிருப்பு பகுதியை சேர்ந்த அரவிந்தன்(23) என்பது தெரியவந்தது. இவர் திருவள்ளூர் மாவட்ட காவல்துறையில் உதவி ஆய்வாளரக பணியாற்றி வரும் ஜெய்சங்கர் என்பவரது மகன் என்பதும் தெரியவந்தது. மேலும், காவல் உதவி ஆய்வாளர் மகன் என்ற தைரியத்தில் காவலரை அநாகரிகமாக பேசி அடித்து சட்டையைக் கிழித்ததும் தெரியவந்தது.
மேலும் படிக்க: பரோட்டா பிரியர்களே உஷார்.. பிரிட்ஜில் வைத்த 50 கிலோ பழைய புரோட்டா நெல்லையில் பறிமுதல்
இதையடுத்து அரவிந்தன் மீது ஆபாசமாக பேசுதல், கொலை மிரட்டல் விடுத்தல், அரசு அதிகாரிகளை பணி செய்ய விடாமல் தடுத்தல் உள்ளிட்ட 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து கீழ்ப்பாக்கம் போலீசார் கைது செய்துள்ளனர்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.