4 வயது மகள் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை... வழக்கை வாபஸ் பெற தந்தைக்கு மிரட்டல்...!

திருமுல்லைவாயில் சிறுமி கொலை வழக்கில் உடற்கூராய்வு அறிக்கை, தடயவியல் அறிக்கை உள்ளிட்டவைகள் கிடைப்பதில் காலதாமதம் ஆவதால் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்வதும் தாமதம் ஆவதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Web Desk | news18
Updated: July 11, 2019, 9:02 AM IST
4 வயது மகள் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை... வழக்கை வாபஸ் பெற தந்தைக்கு மிரட்டல்...!
கோப்புப்படம்
Web Desk | news18
Updated: July 11, 2019, 9:02 AM IST
சென்னை அடுத்த திருமுல்லைவாயிலில் 4 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்த விவகாரத்தில், வழக்கை வாபஸ் பெற மிரட்டல் விடுக்கப்படுவதாக சிறுமியின் தந்தை சென்னை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.

சென்னை திருமுல்லைவாயிலில் கடந்த மாதம் காவல் நிலையம் அருகில் உள்ள அந்தோணி நகரில் மீனாட்சி சுந்தரம் என்பவர் 4 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்த சம்பவம் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியது.

மீனாட்சி சுந்தரம் மற்றும் கொலையை மறைக்க அவருக்கு உடந்தையாக இருந்த அவரது மனைவி ராஜம்மாள் கைது செய்யப்பட்னர்.

குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து சிறையில் அடைக்கப்பட்டனர்.

இந்நிலையில் சிறுமியின் தந்தை சென்னை பெருநகர காவல் ஆணையரை நேரில் சந்தித்து புகார் மனு ஒன்றை அளித்துள்ளார்.

அதில், மீனாட்சி சுந்தரத்தின் மகன் தன்னை மிரட்டி புகாரை வாபஸ் பெற வைக்க முயற்சி செய்வதாகவும், மன உளைச்சலை ஏற்படுத்தும் வகையில் தொடர்ந்து தொந்தரவு கொடுத்து வருவதாகவும் தெரிவித்துள்ளார்.

குற்றவாளிகள் வெளியே வராத வண்ணம் நடவடிக்கையை துரித்தப்படுத்தி தூக்கு தண்டனை பெற்றுத்தர வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

மேலும் பிணையில் வர முயற்சி செய்வதாகவும், போலீசார் இதை தடுத்து நிறுத்த வேண்டும் என பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு ஆதரவாக செயல்படும் தொண்டு நிறுவனத்தை சேர்ந்த கன்னியா என்பவர் கூறியுள்ளார்.

இந்த மிரட்டல் தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறை தரப்பில் உறுதி அளிக்கப்பட்டுள்ளது. திருமுல்லைவாயில் சிறுமி கொலை வழக்கில் உடற்கூராய்வு அறிக்கை, தடயவியல் அறிக்கை உள்ளிட்டவைகள் கிடைப்பதில் காலதாமதம் ஆவதால் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்வதும் தாமதம் ஆவதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Also see... எதிரியைக் கொல்ல பாம் தயாரித்த ரவுடி... நேரம் தவறி வெடித்ததால் போலீசில் சிக்கினார்.

அரசியல், சினிமா, வைரல், செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க. சுவாரஸ்யமான வீடியோக்கள், விவாதங்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.First published: July 11, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...