சென்னை : மசாஜ் சென்டரில் பாலியல் தொழில் நடத்திய நபர் கைது... 3 பெண்கள் மீட்பு

சென்னை : மசாஜ் சென்டரில் பாலியல் தொழில் நடத்திய நபர் கைது... 3 பெண்கள் மீட்பு

மாதிரி படம்

குரோம்பேட்டை நியூகாலனி பகுதியில் உள்ள மசாஜ் சென்டரை கண்காணித்த போது அங்கு பாலியல் தொழில் நடத்தி வந்தது உறுதி செய்யப்பட்டது.

 • Share this:
  சென்னை குரோம்பேட்டை பகுதியில் மசாஜ் சென்டரில் பாலியல் தொழில் நடத்தி வந்த நபரை போலீசார் கைது செய்தனர். மேலும் அங்கிருந்த 3 பெண்களும் மீட்கப்பட்டுள்ளனர்.

  சென்னை நகருக்கு வேலை தேடி வரும் அப்பாவி இளம்பெண்களிடம் சினிமா மற்றும் தொலைக்காட்சி தொடர்களில் நடிக்க வாய்ப்பு வாங்கித் தருவதாகவும், தனியார் நிறுவனங்களில் நல்ல சம்பளத்தில் வேலை வாங்கித் தருவதாகவும், ஆசை வார்த்தைகள் கூறி, அடுக்குமாடி குடியிருப்புகள், பங்களா வீடுகள் மற்றும் தனியார் விடுதிகளுக்கு அழைத்துச் சென்று தங்க வைத்து அவர்களை கட்டாயப்படுத்தி விபச்சாரத் தொழிலில் ஈடுபடுத்தி சிலர் பணம் சம்பாதிப்பதாக கிடைத்த ரகசிய தகவலின் பேரில் குற்றவாளிகளை கைது செய்து நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

  அதன்பேரில் ஆய்வாளர்கள் தலைமையில் தனிப்படைகள் அமைத்து ரகசியமாக கண்காணித்து விபச்சார தரகர்களை கைது செய்து நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இதன் தொடர்ச்சியாக குரோம்பேட்டை காவல் நிலைய ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினருக்கு கிடைத்த ரகசிய தகவலின் பேரில் குரோம்பேட்டை நியூகாலனி பகுதியில் உள்ள மசாஜ் சென்டரை கண்காணித்த போது அங்கு பாலியல் தொழில் நடத்தி வந்தது உறுதி செய்யப்பட்டது.

  பின்னர் மசாஜ் சென்டரில் பாலியல் தொழில் நடத்தி வந்த சேத்துப்பட்டு பகுதியை சேர்ந்த கலைவாணன்(23) கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இதையடுத்து அந்த இடத்தில் பாலியல் தொழிலில் ஈடுபடுத்த தங்க வைத்திருந்த 3 பெண்களை மீட்கப்பட்டனர்.மீட்கப்பட்ட 3 பெண்களும் மகளிர் காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்டனர்.
  Published by:Vijay R
  First published: