• HOME
 • »
 • NEWS
 • »
 • tamil-nadu
 • »
 • அண்ணன் கொலைக்கு பழிக்குப்பழி.. ரவுடியின் மாமனாரை வெட்டிக்கொன்ற கும்பல் - 12 மணிநேரத்தில் கொலையாளிகளை பிடித்த காவல்துறை

அண்ணன் கொலைக்கு பழிக்குப்பழி.. ரவுடியின் மாமனாரை வெட்டிக்கொன்ற கும்பல் - 12 மணிநேரத்தில் கொலையாளிகளை பிடித்த காவல்துறை

செம்மஞ்சேரி வழக்கில் கைதானவர்கள்

செம்மஞ்சேரி வழக்கில் கைதானவர்கள்

சிசிடிவி கேமராவில் பதிவான காட்சியை ஆராய்ந்து பார்த்தபோது 2 இருசக்கர வாகனத்தில் 6 இளைஞர்கள் சென்றுள்ளது பதிவாகியிருந்தது

 • Share this:
  அண்ணனை கொலை செய்த ரவுடியின் மாமனாரை சரமாரியாக வெட்டிப் படுகொலை செய்து பழி தீர்த்த சம்பவம் சென்னை செம்மஞ்சேரி பகுதியில் அரங்கேறியது. 12 மணி நேரத்தில் கொலையாளிகளை பிடித்த தனிப்படை போலீசார்.

  சென்னை செம்மஞ்சேரி சுனாமி குடியிருப்பு 7வது அவென்யூ 82வது குருக்கு தெருவில் வசித்து வந்த 41-வயதான வேலு என்பவரை (04.07.2021) நேற்று அதிகாலை சுமார் 3 மணியளவில் 6 பேர் கொண்ட கும்பல் சரமாறி அரிவாளால் வெட்டி படுகொலை செய்தனர். கொலை சம்பவம் குறித்து தகவல் அறிந்த செம்மஞ்சேரி போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து வேலுவின் உடலை கைபற்றி உடற்கூறு ஆய்வுக்காக சென்னை இராயபேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

  Also Read: ‘டேய் தகப்பா இது நியாயமா!’ - மனைவி சித்தியான சோகக்கதை
   

  பின்னர் இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் துரைப்பாக்கம் உதவி ஆணையர் ரவி தலைமையில் உதவி ஆய்வாளர் ஐயப்பன், தலைமை காவலர்கள் புஷ்பராஜ், திருமுருகன், தாமோதரன், முதல்நிலை காவலர்கள் சிங்காரவேலன், பாலமுருகன் ஆகியோர் அடங்கிய தனிப்படை அமைத்து குற்றவாளிகளை தேடிவந்தனர்.

  தனிப்படை போலீசார் தங்களது விசாரணையை முதலில் வேலுவின் குடும்பத்தாரிடம் துவங்கினர். கொலையான வேலு கொரோனா ஊரடங்கு நேரத்தில் சென்னை துரைப்பாக்கம், நீலாங்கரை போன்ற பகுதியில் சென்னை மாநகராட்சி சார்பில் ஒப்பந்த ஊழியராக கொசு மருந்து தெளிக்கும் பணியில் ஈடுபட்டு வந்துள்ளார்.

  மதுவிற்கு அடிமையான அவர் தினந்தோறும் இரவு உறங்குவதற்கு முன்பு மது குடிப்பது வழக்கமாக கொண்டுள்ளார். நேற்றைய முன்தினம் அதேபோல் மது அருந்திவிட்டு வீட்டின் வெளியே உறங்கியுள்ளார் அப்பொழுதுதான் அதிகாலை வேலு சரமாறியாக வெட்டி படுகொலை செய்யப்பட்டுள்ளார்.

  குடும்பத்தாரிடம் விசாரணையை முடித்துக்கொண்ட தனிப்படை போலீசார்  கொலை சம்பவம் நடைபெற்ற நேரத்தில் அருகில் உள்ள குடியிருப்பு மற்றும் சாலைகளில் பாதுகாப்பிற்காக பொறுத்தியிருந்த சிசிடிவி கேமராவில் பதிவான காட்சியை ஆராய்ந்து பார்த்தபோது 2 இருசக்கர வாகனத்தில் 6 இளைஞர்கள் சென்றுள்ளது பதிவாகியிருந்தது.

  சிசிடிவி கேமராவில் பதிவான காட்சியை கைபற்றிய போலீசார் கொலையான வேலுவின் மகளிடம் காண்பித்து இந்த காட்சியில் உள்ளவர்களை தெரியுமா என்று பார்க்க சொல்ல அதில் உள்ள அனைத்து நபர்களின் பெயரையும் அவர் புட்டு புட்டு வைத்ததும் தனிப்படை போலீசார் கொலையாளிகளை உறுதி செய்தனர்.

  பின்னர் அவர்கள் சென்ற வழியெங்கும் உள்ள சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்தபடியும், அவர்களின் செல்போன் என்னை வைத்தும் அவர்களை தனிப்படை போலீசார் பின் தொடர்ந்துள்ளனர். சென்னையில் கொலை செய்துவிட்டு செங்கல்பட்டு மாவட்டத்தின் எல்லை பகுதியில் தலைமறைவாக பதுங்கியிருந்த 6 பேரை தனிப்படை போலீசார் சுற்றிவலைத்து பிடிக்க முயன்றபோது போலீசாரிடம் தப்பி ஓடியுள்ளனர். பின்னர் தனிப்படையினர் அவர்களை ஒவ்வொருவரையும் துரத்தி பிடித்துள்ளனர்.

  பின்னர் 6 பேரையும் காவல் நிலையம் அழைத்து வந்த போலீசார் அவர்களிடம் நடத்திய விசாரணையில் 2 இளம் சிறார் மற்றும் 23-வயதான சேட்டு(எ)பாலாஜி, 18-வயதான மோட்டோ(எ)தினேஷ், 19-வயதான சார்லஸ், சஞ்சய் என்பது தெரியவந்தது. வேலுவை எதற்காக கொலை செய்தார்கள் என்று விசாரணை நடத்தியபோதுதான் இந்த கொலை பழி தீர்க்க மட்டுமே அரங்கேறியது என்று தெரியவந்தது.

  Also Read: மரத்தில் தொங்கவிட்டு இளம்பெண் சித்ரவதை.. வெளியான அதிர்ச்சி வீடியோ

  கொலை, கொலை முயற்சி, கஞ்சா, மற்றும் வழிபறி போன்ற குற்றச்சம்பவகளில் ஈடுபட்டு பல காவல் நிலையங்களில் வழக்குகள் நிலுவையில் உள்ள  சுரேஷ் தற்பொழுது சிறையில் உள்ளார். இந்நிலையில்  சுரேஷின் நெருங்கிய நண்பரான ஸ்டீபன் அவருடைய நண்பர்களுடன் இனைந்து கடந்த 16ம் தேதி சென்னை சேத்துப்பட்டில் கருப்பா(எ)வடிவழகன் என்பவரை சரமாறி வெட்டிபடுகொலை செய்துள்ளனர்.

  கருப்பா(எ)வடிவழகனை கொலை செய்ததில்  சுரேஷ்க்கு முக்கிய பங்கு இருப்பதால் அவருடைய குடும்பத்தினரை யாரையாவது ஒருத்தரை கொலை செய்து பழி தீர்த்துக்கொள் வேண்டும் என திட்டம் தீட்டிய வடிவழகனின் தம்பி சேட்டு(எ)பாலாஜி அவருடைய நண்பர்களுடன் சேர்ந்து இந்த கொலையை செய்ததாக விசாரணையில் கூறியதாக போலீசார் தெரிவித்தனர்.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

  அதை தொடர்ந்து போலீசார் நடத்திய விசாரணையில் சேட்டு(எ)பாலாஜி கடந்த வருடம் திருப்பூர் மாவட்டத்தில் தொழிலதிபரை கொலை செய்த சம்பவத்தில் முக்கிய குற்றவாளி என்பதும், செம்மஞ்சேரி காவல்நிலைய ஜிப்சி வாகனத்தின் கண்ணாடியை இருமுறை வெட்டி தூள் தூளாக்கிய வழக்கும், சென்னை சேப்பாக்கத்தில் போலீசாரை தாக்கிய வழக்கும் நிலுவையில் உள்ளது.

  இதுமட்டுமல்லாமல் கடந்த பிப்ரவரி மாதம் செம்மஞ்சேரி காவல் நிலையத்தில் நடைபெற்ற கொலை முயற்சி வழக்கு ஒன்றில் (307ipc) சிறை சென்ற நிலையில் மீண்டும் வெளியே வந்ததும் அண்ணணின் கொலைக்கு பழிதீர்க்கவே இந்த கொலை சம்பவத்தை அரங்கேற்றியதாக  போலீசார் தெரிவித்தனர்.

  சென்னை செம்மஞ்சேரி சுனாமி குடியிருப்பு பகுதியில் கஞ்சா விற்பனை, கஞ்சா புகைப்பது அதிகமானதால் குற்றச்சம்பவங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டு வருவதும், அங்குள்ள மக்கள் பீதியில் உள்ளதாகவும், காவல்துறையினர் இரும்புகரம் கொண்டு ஒடுக்கினால் மட்டுமே இந்த பகுதியில் வசிக்கும் மக்கள் நிம்மதியாக வாழமுடியும் என்ற சூழலுக்கு தள்ளப்பட்டுள்ளதாக தெரிவித்தனர். புதிய டிஜிபி, புதிய அரசாங்கம் செம்மஞ்சேரி சுனாமி குடியிருப்பை அமைதி பூங்காவாக மாற்ற முன்வருமா  என்ற கேள்வி அங்குள் அனைத்து மக்கள் மனதிலும் எழுகிறது.

  கொலை நடைபெற்ற அடுத்த 12 மணி நேரத்தில் கொலை சம்பவத்தில் ஈடுபட்டவர்களை கைது செய்த துரைப்பாக்கம் உதவி ஆணையர் ரவி தலைமையிலான உதவி ஆய்வாளர் ஐயப்பன், தலைமை காவலர்கள் புஷ்பராஜ், திருமுருகன், தாமோதரன், முதல்நிலை காவலர்கள் சிங்காரவேலன், பாலமுருகன் ஆகியோர் அடங்கிய தனிப்படை போலீசாரை அடையார் துணை ஆணையர் விக்ரமன் வெகுவாக பாராட்டினார்.

  செய்தியாளர்: வினோத் கண்ணன்  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

  Published by:Ramprasath H
  First published: