ஒரே நாடு, ஒரே தேர்தல் என்பவர்கள்... ஒரே கோவில், ஒரே சுடுகாடு என்று கூறுவார்களா? சீமான் கேள்வி!

தொடர்ந்து நடைபெற்றுவரும் ஆணவக் கொலைகளை குறித்து பேசிய சீமான் ஆட்சியில் இருப்பவர்கள் தான் ஆணவக்கொலைகளைதடுக்க வேண்டும் என்றும் தெரிவித்தார்.

news18
Updated: July 18, 2019, 3:10 PM IST
ஒரே நாடு, ஒரே தேர்தல் என்பவர்கள்... ஒரே கோவில், ஒரே சுடுகாடு என்று கூறுவார்களா? சீமான் கேள்வி!
சீமான்
news18
Updated: July 18, 2019, 3:10 PM IST
ஒரே நாடு, ஒரே தேர்தல், ஒரே வரி என்று கூறுவது நாட்டின் இறையாண்மைக்கு எதிரானது என்றும், இவ்வாறு கூறுபவர்கள் ஒரே நாடு ஒரே குளம், ஒரே கோவில், ஒரே சுடுகாடு என்று சொல்வார்களா என்று சீமான் கேள்வி எழுப்பியுள்ளார்.

சென்னை எழும்பூர் உள்ள இந்திய சுதந்திர போராட்ட வீரர் அழகு முத்துக்கோன் 262-வது குருபூஜை விழாவை முன்னிட்டு அவரது திருவுருவ சிலைக்கு நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த சீமான் பேசுகையில், ஆங்கிலேயர்களின் பீரங்கிகளுக்கு பயப்படாமல் போராடியவர் அழகு முத்துக்கோன் என்று கூறினார்.

மேலும், வைகோ மாநிலங்களவை உறுப்பினர் ஆனதற்கு சட்டத்தில் ஓட்டை இருப்பதாக கூறும் ஹெச்.ராஜா அதை அடைக்க வேண்டியது தானே எனவும் சீமான் விமர்சனம் செய்தார்.

தொடர்ந்து பேசிய சீமான், ஒரே நாடு, ஒரே தேர்தல், ஒரே வரி என்று கூறுவதே நாட்டின் இறையாண்மைக்கு எதிரானது என்றும், இவ்வாறு கூறுபவர்கள் ஒரே நாடு ஒரே குளம், ஒரே கோவில், ஒரே சுடுகாடு என்று சொல்வார்களா என்றும் கேள்வி எழுப்பினார்.

மேலும், கோதாவரி- காவிரி ஆறுகளை இணைத்தால் மட்டும் தமிழகத்திற்கு தண்ணீர் கிடைத்துவிடுமா என்று கேள்வி எழுப்பிய சீமான், நதி நீர் இணைப்பு என்பது ஏமாற்று வேலை எனவும் குற்றச்சாட்டினார்.

தொடர்ந்து நடைபெற்றுவரும் ஆணவக் கொலைகளை குறித்து பேசிய சீமான் ஆட்சியில் இருப்பவர்கள் தான் ஆணவக்கொலைகளைதடுக்க வேண்டும் என்றும் தெரிவித்தார்.

Also see...

First published: July 11, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...