சுதந்திர தினத்தை ஒட்டி சென்னை விமான நிலையத்தில் பாதுகாப்பு அதிகரிப்பு!

விமான நிலையத்தின் எரிபொருள் நிரப்பும் பகுதி, வாகன நிறுத்துமிடம் போன்ற பகுதிகளில் கண்காணிப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

Web Desk | news18
Updated: August 9, 2019, 9:28 AM IST
சுதந்திர தினத்தை ஒட்டி சென்னை விமான நிலையத்தில் பாதுகாப்பு அதிகரிப்பு!
சென்னை விமான நிலையம்.
Web Desk | news18
Updated: August 9, 2019, 9:28 AM IST
சுதந்திர தின விழாவையொட்டி சென்னை விமான நிலையத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகள் அதிகரிக்கப்பட்டுள்ளன.

நாட்டின் 73-வது சுதந்திர தினம் 15-ம் தேதி கொண்டாடப்பட உள்ளது. இதற்காக சென்னை விமான நிலையத்தில் நேற்று காலை 6:00மணி முதல் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது. கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் முதலே இங்கு 7 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டது.

தற்போது அதை விட அதிகமாக 'ரெட் அலர்ட்' பாதுகாப்பு வளையத்திற்குள் விமான நிலையம் கொண்டு வரப்பட்டுள்ளது. இதனால் உள்நாட்டு விமான முனையத்திற்கு பயணிகள் ஒன்றரை மணி நேரம் முன்னதாகவும் பன்னாட்டு விமான முனையத்திற்கு 3 மணி நேரம் முன்னதாகவும் வர வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.


விமான நிலையத்தின் எரிபொருள் நிரப்பும் பகுதி, வாகன நிறுத்துமிடம் போன்ற பகுதிகளில் கண்காணிப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. விமான நிலையத்திற்கு வரும் வாகனங்களை நுழைவு வாயிலிலேயே மோப்ப நாய் உதவியுடன் வெடிகுண்டு நிபுணா்கள் சோதனை செய்த பின்னே உள்ளே அனுமதிக்கின்றனர்.

மேலும் படிக்க... நேர்கொண்ட பார்வை விமர்சனப் பார்வை


Loading...
அரசியல், சினிமா, வைரல், செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க. சுவாரஸ்யமான வீடியோக்கள், விவாதங்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.First published: August 9, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...