காங்கிரஸ் உடன் தொகுதி ஒதுக்கீடு நிறைவு! நாளை மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

காங்கிரஸ் கட்சியுடனான தொகுதி ஒதுக்கீடு பேச்சுவார்த்தையில் ஏழு தொகுதிகள் வரை ஏற்கெனவே உடன்பாடு ஏற்பட்டிருந்தது. மீதமுள்ள தொகுதிகளில்தான் இழுபறி நீடித்துவந்ததாக கூறப்பட்டது.

news18
Updated: March 14, 2019, 5:56 PM IST
காங்கிரஸ் உடன் தொகுதி ஒதுக்கீடு நிறைவு! நாளை மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
மு.க.ஸ்டாலின் - கே.எஸ்.அழகிரி
news18
Updated: March 14, 2019, 5:56 PM IST
தி.மு.க கூட்டணியுடன் தொகுதி ஒதுக்கீடு சுமூகமாக நடைபெற்றது என்று காங்கிரஸ் கட்சியின் தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.

தி.மு.க கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு 10 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. காங்கிரஸ் கட்சி போட்டியிடும் தொகுதிகள் குறித்து தி.மு.கவுடன் ஏற்கெனவே இரண்டு கட்டப் பேச்சுவார்த்தைகள் நடைபெற்றன.

புதுச்சேரியில் காங்கிரஸ் போட்டியிடுவது ஏற்கெனவே உறுதியான ஒன்று. காங்கிரஸ் கட்சியுடனான தொகுதி ஒதுக்கீடு பேச்சுவார்த்தையில் ஏழு தொகுதிகள் வரை ஏற்கெனவே உடன்பாடு ஏற்பட்டிருந்தது. மீதமுள்ள தொகுதிகளில்தான் இழுபறி நீடித்துவந்ததாக கூறப்பட்டது.

சென்னை அண்ணா அறிவாலயத்தில் இன்று மு.க.ஸ்டாலின் முன்னிலையில் நடைபெற்ற மூன்றாம் கட்டப் பேச்சுவார்த்தையில் தொகுதி ஒதுக்கீடு நிறைவடைந்தது.

தொகுதி ஒதுக்கீடு நிறைவடைந்த பிறகு ஒப்பந்தத்தில் தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் மற்றும் காங்கிரஸ் கட்சியின் தமிழ் மாநில தலைவர் கே.எஸ்.அழகிரி ஆகியோர் கையெழுத்திட்டனர்.

அதன்பிறகு செய்தியாளர்களிடம் பேசிய கே.எஸ்.அழகிரி, ‘இந்த உடன்படிக்கையில், வெற்றி வாய்ப்புள்ள தொகுதிகளைக் கேட்டு பெற்றுள்ளோம். இரண்டு கட்சிகளுக்கிடையே பேச்சுவார்த்தை சுமூகமாக நடைபெற்றது.

காங்கிரஸ் சார்பில் வரும் 15, 16-ம் தேதிகளில் விருப்பமனு பெறுகிறோம். எங்கள் கூட்டணிக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது.
Loading...
தி.மு.க கூட்டணியில் உள்ள கட்சிகள் போட்டியிடும் தொகுதிகள் குறித்து மு.க.ஸ்டாலின் நாளை அறிவிப்பார். ராகுல் காந்தி எதிர்மறையான கருத்துகளைப் பேசுவது இல்லை. ராகுல் காந்தி, மக்களை நேசிக்கக் கூடிய தலைவர்.

ராகுல் காந்தி நினைத்திருந்தால் 2009-ம் ஆண்டிலேயே அவர், பிரதமராக வந்திருக்கலாம். அவருக்கு பதவி ஆசை கிடையாது. ஸ்டெல்லா மேரிஸ் கல்லூரியில் நடந்த நிகழ்வு மணிரத்னம் படக் காட்சி போல அழகாக இருந்தது’ என்று தெரிவித்தார்.

Also see:

 
First published: March 14, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...